பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


140 ரசிகமணி டிகேசி

இப்போது கலாக்ஷேத்திரத்திற்குப் போகிறேன், எல்லாம் முப்பது பேர். மற்றவர்களை அதாவது ஐம்பதுக்கு வருகிறவர்களை வரவேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள்

ருக்மணி தேவி.

விஷயம் தெரிகிறதல்லவா. மன்னித்துவிடுங்கள்.

டில்லி தமிழ்ச் சங்கத்தார் வி.வி.எஸ். அய்யரது கம்பர் என்ற ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். வி.வி.எஸ். அய்யர் முதல் பாராவில் கம்பர்தான் உலகத்தில் மேலான கவிஞர் என்று கட்டியம் கூறுவது போல எழுதிவிட்டார். கோபம் வந்துவிட்டது நம்முடைய வால்மீகிக்கு. எழுத ஆரம்பித்துவிட்டார்கள். வி.வி.எஸ் அய்யர் மேல் கம்பர் மேல், தமிழ் மேல், உலகத்தின் மேலேயே கோபம். ஆனாலும் கம்பரைப் பற்றிப் பிரசங்கம் செய்கிறார்கள். இது ஒரு புது யுகந்தான். -

ராஜேஸ்வரி, குழந்தை, அம்மாள் எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்தும் அன்பும்.

குறிப்பு - 10 ஆம் தேதி வாக்கில் குற்றாலம் திரும்ப உத்தேசம்.

தங்கள் டி.கே. சிதம்பரநாதன்

&

3.