பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

ரசிகமணி டிகேசி


திருக்குற்றாலம்
தென்காசி
21.5.52

அன்பான நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

கடிதங்கள் கிடைத்தன. மிக்க சந்தோஷம். தென்காசி திருவள்ளுவர் கழகத்து வெள்ளிவிழாவுக்கு வருகிறீர்கள். கொஞ்சம் செளகரியப்படுத்திக்கொண்டு வந்தால் நல்லது. யார் யார் எல்லாமோ கம்பரைப் பற்றி எப்படி எல்லாமோ பேசித் தொலைத்திருக்கிறார்கள். எழுதியும் தொலைத்திருக்கிறார்கள். புத்தகமாக வேறு வெளிவருகிறது. யாரும் கம்பரை உணர்ந்ததாக இல்லை. அது குற்றம் அல்ல. கம்பரைப் பற்றி விஷயம் தெரிந்துகொள்ளுவது கஷ்டந்தான். நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் கம்பர் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஆகவே கம்பரை அறியவில்லை என்றால் குற்றம் இல்லை. ஆனால் கம்பரை மேலே எவ்வவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பேசுகிறது, எழுதுகிறது, புத்தகம் போடுகிறது என்று வந்துவிட்டால் சங்கடமான காரியந்தானே. இந்தப் புண்ணிய ஆத்மாக்களைப் பற்றி எல்லாம் பேச வேண்டியிருக்கிற தல்லவா. அதற்காகத்தான் செளகரியப்படுத்திக்கொண்டு வரச் சொல்லுகிறேன்.

கம்பருடைய காரியமோ பொல்லாத காரியம். அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் முத்துச்சலாபம் குளிக்கிறவர். அவரோடு கீழே முங்குவதற்கு முதலில் அபார தைரியம் வேண்டும். அதோடு தண்ணீரில் இறங்குகிற பழக்கமும் வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் மகாராஜனிடத்திலும் சகோதரி வேலம்மாளிடத்திலும் இருக்கின்றன. கம்பருடைய யோகந்தான். நம்முடைய யோகமுந்தான்.