பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

145


கம்பர் தனி சிருஷ்டிகர்த்தா. பிரம்மாவோடு போட்டி போடுகிறவராய் இருக்கிறார். அதற்கு இடம் கொடுத்துவிடலாமா, தமிழனை மண்டையில் ஒரு தட்டுத் தட்டவேண்டியதுதான் என்று நம்முடைய தமிழ் நண்பர்கள் ரொம்ப ரொம்ப வேலை செய்து வருகிறார்கள். தமிழ் கொடுத்த ரூபாய் எல்லாம் அப்போதுதான் ஜீரணமாகும்போல் படுகிறது அவர்களுக்கு. தமிழனைப் பிடித்த ஜாதகம் அப்படி இருக்கிறது.

இந்த நிலையில் கும்பகோணத்தில் தமிழ்ப் பக்தர்கள் இருக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொண்டாடத்தக்க காரியம்.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖