பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


146 ரசிகமணி டிகேசி

திருக்குற்றாலம் தென்காசி f2.1.53

அன்பான பாஸ்கரன் அவர்களுக்கு

அன்பான கடிதம் வந்தது. சர்க்கார் வேலை வேண்டிய மட்டும் அதற்கு மேல் சமயத் தொண்டும் சமயத் தொண்டு உங்களை இங்கேயே கெண்டுவரப் போகிறது. மிக்க சந்தோஷம்.

தஞ்சையில் தான் ராஜேஸ்வரியும் குழந்தைகளும் பொழுது காணாதுதான். - -

அவ்வப்போது திருக்கோயிலூருக்கும் போய் வருகிறார்கள். அவள் இல்லாதபோது வீடு ஒரு மாதிரியாகத் தான் இருக்கும். -

ஹிலால் பிரஸ் இன்னும் எழுத்துகளை முற்றிலும் வார்த்தாக வில்லை என்று தெரிகிறது. ஆனவுடன் புரூப் போட்டுக்கொண்டு வருவதாகக் கடிதம் வந்திருக்கிறது. கம்பர் காரியம் எல்லாம் அப்படித்தான். ஆயிரம் வருஷம் காத்திருக்கிறார் தன்னை உலகம் அறிந்துகொள்ள. இன்னும் கொஞ்சம் காத்திருக்கட்டுமே. - -

தமிழ்க் களஞ்சியத்தைப் பலரும் பயப்படாமல் எடுத்துப் படிக்கிறதாகத் தெரிகிறது. தமிழ் செய்த புண்ணியந்தான். ஆனால் தமிழ் ஆசிரியர் யாருமே அதை ஏறிட்டுப் பார்த்தாகத் தெரியவில்லை. புண்ணியம் செய்த பாடல்கள்தான்.

சக்ராந்திக்கு எல்லாரும் வருவார்கள். எல்லாருக்கும் என் அன்பு, - - -

தங்கள் டி.கே. சிதம்பரநாதன்