பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

15


அந்த சமயத்தில் கல்கி எல்லாம் வந்து 13 நாள் எங்களோடேயே தங்கினது உற்சாகமாக இருந்தது. அவர்கள் சென்னைக்குப் புறப்பட்டுப் போய்விட்டபின் குற்றாலம் குற்றாலமாகக் காணவில்லை. நான் என்னடா செய்கிறது என்று கையை நெறித்துக் கொண்டிருந்தேன்.

வருகிற செவ்வாய் அன்று இங்கிருந்து வண்ணாரப் பேட்டைக்குத் திரும்ப உத்தேசித்திருக்கிறேன். அங்கே வந்துவிட்டால் எப்படியும் தங்களைப் பார்த்தல் எளிது. தங்களுக்கு தூத்துக்குடி விலாசத்திற்கு எழுதவேண்டும் என்று கருதிக் கொண்டிருந்த தருணத்திலேயே தங்கள் கடிதம் வந்தது. அது ஒரு அதிசயந்தானே. தாங்கள் அம்மாள் குழந்தை எல்லாம் சௌக்கியம் என்று நம்புகிறேன்.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖