பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் - 17

பாரதியாரின் கவியைப் புகழ்ந்து பேசினாலும் அவர்கள் அதை நான் மதிக்கிற அளவு அனுபவிக்கிற அளவு, மதிக்கிறதாக அனுபவிக்கிறதாகவாவது சொல்லமுடியாது. கவியை எவ்வளவோ அனுபவித்தாலும் அவர் எழுதிய வசனம், நான் படித்தமட்டில் அவ்வளவாகச் சிறந்ததென்று சொல்லமுடியாது. அப்படியேதான் வி.வி.எஸ். ஐயர் எழுதிய வசனமும் பகட்டும் பளபளப்பும் அதிகப்பட்டு, உண்மையான பாவம் அதாவது சாயல் சிதைந்து போவதையே காண்கிறோம். இந்த இரண்டு ஆசிரியர்களின் வசனத்தைப் பற்றி எத்தனையோ தடவை நான் பேசினதுண்டு. அதை ஒட்டித்தான் (மறதியினால் அல்ல, பகைமையோ இல்லவே இல்லை) கணையாழியின் முகவுரையில் அவர்களைப் பற்றிப் பிரஸ்தாபியாமல் விட்டது. இது ஒன்றும் தெரியாமல் பேனாவும் கடுதாசியும் கிடைத்தது என்று எண்ணிக்கொண்டு கைக்கு வந்ததை எழுதிவிட்டால் நாம் என்ன செய்கிறது. சிரிக்க வேண்டியதுதான். வேண்டுமானால் தமிழ் மகள் அழுது கொள்ளட்டும்.

தாங்கள் சொல்லுகிறபடி உயிருள்ள தமிழ், உயிர் அற்ற தமிழ் என்ற வித்தியாசம் நம்மவர்களுக்குத் தெரியவேணும். அப்படித் தெரிந்தால் அல்லவா உண்மையான இலக்கியம் நாட்டில் உற்பத்தியாகும். சுந்தரம், சோமு இருவருக்கும் பரிசு கிடைத்தது வட்டத்தொட்டிக்கே ஒரு சிறப்பு. சுந்தரம் தங்கள் கடிதத்தை வாசித்து நடை நல்ல மாதிரியாக உல்லாசப் போக்காய் ஓடுகிறது என்று அனுபவித்துச் சொன்னார். பரிசு கிடைத்தது சம்பந்தமாய் தாங்கள் சந்தோஷப்பட்டதற்கும் நன்றி ரொம்பவும் பாராட்டுகிறார்.

இரண்டு மாசமாய் நான் குற்றாலத்தில் தங்கிவிட்டதால் மார்ச்சு மாசம் மத்தியில் இங்கே வந்தபோது ஒரு கூட்டம் மாத்திரம் கூடி கிஷ்கிந்தா காண்டத்தை முடித்தோம். மே முதல் த்ேதி வாக்கில் கன்னியாகுமரிக்கு முகாம் போவதாக உத்தேசம். ஏதோ பத்து இருபதுநாள் தங்கலாம் என்று