உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ரசிகமணி டிகேசி


பாரதிவிழா ஆரம்பிக்கும் முன்னதாக தாங்கள் வீட்டில் கம்ப ராமாயண வாசிப்பு நடத்தத் தயாராய் வருகிறேன். நேரம் இருந்தால் வைத்துக் கொள்ளுவோம். அல்லாத பட்சம் பாரதி விழாவை ஆரம்பித்துவிடலாம்.

தங்களுடைய அழைப்பை எல்லாருமாக அனுபவிக்கிறோம். வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியத்தானே.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖