பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் 23

வண்ணார்பேட்டை 8.9.38

நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

பாரதி நாள் அறிக்கைகளும் தங்களுடைய குறிப்பும் வந்து சேர்ந்தன. வட்டத்தொட்டி நண்பர்கள் பலரையும் நேற்று இரவு பாளையங்கோட்டையில் வைத்துச் சந்திக்க நேர்ந்தது. கவுண்டர், ரீனிவாசராகவன் மகரம் முதலாகப் பலருடனும் கலந்து ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்கு எல்லாரும் என் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடவேணும். பிறகு 9 மணிக்கு இங்கிருந்து பஸ்ஸில் புறப்பட்டு 10 மணிவாக்கில் தங்கள் வீட்டுக்கு வந்துவிடுகிறது என்று தீர்மானித்திருக்கிறோம். ஆவுடையப்பப்பிள்ளை அவர்கள் வருவார்கள். நாகர்கோயில் பி. சிதம்பரம்பிள்ளை அவர்களும் நண்பர்களும் நாகர் கோயிலிருந்து நேராக நாங்குனேரிக்கு அன்று சாயங்காலம் வந்து சேருவதாகச் சொல்லிப் போயிருக்கிறார்கள். சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கும் ஒரு அழைப்புக் கடிதம் அனுப்பும் படி கேட்டுக் கொள்ளுகிறேன். வி.பி.எஸ். அவர்கள் நேற்று இங்கு வந்தார்கள். அவர்களுக்குத் தங்கள் கடிதம் கைக்குக் கிடைக்கவில்லை போல் இருக்கிறது. ஆனால் நான் தங்களுடைய விருப்பத்தை அறிவித்தேன். செளகரியப்பட்டால் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

விழாவில் பேசுகிறதாகக் குறிப்பிட்டிருக்கிற மூவரும் வட்டத் தொட்டின்யச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறோம். ஆகவே நாங்குனேரியிலும் கொண்டாடுவது வட்டத்தொட்டியாகவே முடிந்திருக்கிறது. நாங்குனேரியில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் நம்மோடு கலந்துகொண்டு பேசினால் நயமாய் இருக்கும். இதற்குமுன் நான் எழுதிய கடிதம் வந்திருக்கலாமே. - -

- தங்கள் டி.கே. சிதம்பரநாதன்