பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ரசிகமணி டிகேசி
எட்டறை,
ஐந்தலை அருவி ரோடு,
குறறாலம்
வழி தென்காசி
5.9.39

நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் நேற்று எழுதிய கடிதம் வந்து சேர்ந்தது. ரொம்ப சந்தோஷம். குற்றாலத்தில் அருவி குறைந்துகொண்டு வருவதால் நண்பர் கல்கி மெள்ளப் புறப்படப் பார்க்கிறார்கள். நாங்கள் இங்கு வந்து சுமார் மூன்று வாரமாகிறது. எல்லாம் இதுதான் காரணம். அவர்களுக்கு ஊருக்குப் போகவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆகவே அவர்கள் நாளை ஊருக்குப் புறப்படுகிறார்கள். நானும் இன்னும் பத்துநாளில் சென்னைக்குப் போக வேண்டியிருப்பதால் 7.9.39 அன்று குற்றாலத்தை விட்டுப் புறப்பட்டு வண்ணார் பேட்டைக்குப் போக வேண்டியிருக்கிறது. இதனால் தங்களுக்கு இடைஞ்சல் ஒன்றும் இல்லை. நான் இருக்கும் வீடுகளில் ஒன்றையே தங்களுக்கு அமைத்துவைக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். தாங்களும் அம்மாளும் இங்கு 9.9.39 இல் வந்து சேரும்போது ஜாகை தயாராய் இருக்கும்.

அருவி ஸ்நானத்துக்குப் போதுமானபடி இருக்கிறது. அம்மாள் ஸ்நானம் செய்தால் சுகம் ஏற்படும் என்பது நிச்சயம்.

சென்ற சனிக்கிழமையன்றுதான் ஐந்தாவது கம்பர் கவிச்செல்வம் பற்றிய பிரசங்கம் நடந்தது. ஆறாவதும் கடைசியும் உள் பிரசங்கங்கள் 16.9.39 அன்று நடக்கும். எப்படியோ கம்பரையே முடித்தாய்விட்டது. ரேடியோக்காரரும் அதை எல்லாம் சேர்த்துப் புத்தகமாகப் போடப் போகிறார்கள். கேளாததால் அப்படியாக நஷ்டம் ஒன்றும் தங்களுக்கும்