பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ரசிகமணி டிகேசி


ஏரோ
மீனம்பாக்கம்
2.12.39

நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் அன்பான கடிதம் வந்தது. விளாத்திகுளத்து அதிகாரிகளைப் பார்க்க ரொம்ப சந்தோஷம். பொதுவாக உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ரெட் டேப்பில் ஒன்றில்தான் சுவை. அதையே இருபத்து நாலு மணி நேரமும் முந்நூற்றறுபத்து ஐந்து நாளுமே வாயில் வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கலாம். வேறொரு விஷயத்தில் சுவையிருக்கக்கூடும் என்று எண்ணக்கூட அவர்களுக்கு முடியாது. பண்பாடு என்பது அவர்களிடம் இருந்தால் ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவோ திருத்தங்கள் செய்து கிராமவாசம் நகரவாசத்தைவிட மேலானது என்று எளிதில் காட்டியிருக்கலாமே. தாங்கள் எங்கே போனாலும் அந்தவிதமாக கிராமத்தைத் திருத்தி விடுகிறீர்கள். நாங்குனேரி தாங்கள் இருந்தபோது கலகலப்பாய்த் தான் இருந்தது. விளாத்திகுளத்தில் இவ்வளவெல்லாம் நடந்திருப்பதைப் பார்க்கும்போது அவ்வூர்க்காரர்கள் ரொம்பவும் புண்ணியம் செய்தவர்கள்தான். தாங்கள் விளாத்திகுளத்திலிருக்கும் போது அங்கு வரவேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. எப்படியோ சமயம் வாய்க்காமல் போய்விட்டது. விளாத்திகுளத்துக் காரர் அதிர்ஷ்டசாலிகள் அல்ல என்றும் கோவில்ப்பட்டிக்காரர் அதிர்ஷ்டசாலிகள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. எனக்கு செளகரியம் நாங்கள் கோவில்பட்டியிலிருப்பதுதான்.

தீபாவளி மலரில் தங்கள் கட்டுரை ரொம்பவும் உபயோகமானது. நம்முடைய கலையோ மிகச் சிறந்தது. அதை எடுத்துக்காட்ட வேண்டியது தமிழன் ஒவ்வொருவனுடைய கடமை. மனுஷனுக்கு அறிவு உணர்ச்சி எல்லாம் கெட்டுப்