உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

37


ஏரோ

மீனம்பாக்கம்

21.1.40


நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் மிக்க அருமையோடு அனுப்பிய பொங்கல் வாழ்த்து வந்தது. ரொம்ப சந்தோஷம். கைகுவித்து நண்பர்களைத் தாங்கள் வரவேற்கிறது ரொம்ப வாய்ப்பாய் இருக்கிறது. முகப்பிதழானது சட்டமாகிப் படத்தைப் பின்வாங்கச் செய்வதால் தாங்கள் உருண்டு திரண்டு நின்ற மாதிரியே இருக்கிறது. முகப்பிதழைப் பின்புறமாக மடக்கி ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் உயரமும் விதியும் மாத்திரங்காட்டி மூன்றாவது பண்பான இனத்தை காட்டாது போய்விடும். நம்முடைய நண்பர்கள் எல்லாரும் பால் பொங்கிற்றா என்று விசாரிக்கிற தங்கள் ஆர்வத்தை அனுபவிப்பார்கள். ஆகவே நல்ல பொங்கல் படி கிடைத்துவிட்டதுதான் எங்கள் எல்லாருக்கும்.

பாலரை வாழ்த்திய கர்த்தரில் தமிழ்ப் பாடலின் பண்பு வாய்த்திருக்கிறது.

சின்னஞ்சிறுவர் சிறுமியர்கள் - நிதம்

சிந்தை களிக்கவே வாழ்ந்திருந்தார்

ரொம்ப நயமாய் அமைந்திருக்கிறது. தாங்கள் கையாண்ட ஆங்கில மூலத்தையும் எதிர்ப்பக்கத்தில் அச்சிட்டிருக்கிறது ரொம்ப பிரயோசனம். ஆங்கிலக் கவி ஆங்கிலக் காதுகளுக்கு எப்படி இருக்குமோ. நம்முடைய காதுக்கு நன்றாயிருக்கா? இல்லவே இல்லை என்று சாதித்துவிடுவேன்.