பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ரசிகமணி டிகேசி


ஏரோ
மீனம்பாக்கம்
8.3.40

நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் கடிதம் வந்தது ரொம்ப சந்தோஷம். சென்ற மாதம் அந்தப் பக்கம் வந்திருந்தபோது எப்படியாவது கோயில்பட்டிக்கு ஒருநாள் போய்விட்டு வரவேணும் என்று எண்ணினேன். கலியாண நெருக்கடிகளினால் அது முடியாமல் போயிற்று. கோயில்பட்டி இலக்கியச் சங்கத்தில் தாங்கள் கட்டுரை நிகழ்த்தியதாகவும் ரொம்ப நன்றாய் இருந்ததாகவும் வி.எஸ். சிவக்கொழுந்து முதலியார் சொன்னார். ரொம்ப திருப்தியாய் இருந்தது. தாங்கள் எந்த ஊரிலிருந்தாலும் விளாத்திகுளமாய் இருந்தாலுமே அங்கு ஒரு தமிழ்க்குழாம் கூடிவிடும். கம்பருக்கும் நல்ல காலம் பிறந்துவிடும். கோயில்பட்டியில் தெல்லாம் நடந்தது என்பதில் அதிசயம் இல்லைதான்.

இந்த வருஷம் காரைக்குடியில் நாலுநாள் 21.3.40 முதல் 24.3.40 வரை வெகுவிமரிசையாக கம்பர் விழாவை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கென்று ஒரு படம் தயாரித்திருக்கிறார்கள். தாங்கள் பால்நாடார் அவர்கள் மற்ற நண்பர்களும் அங்கு வருவீர்கள் என்று நம்புகிறேன். விழாவோடு முதல் இரண்டு நாளும் கலந்து கொள்ள எனக்கு முடியும். மூன்று நாள் தென்காசிக்கு என் மருமகனுடைய மகள் கலியாணத்துக்கு நான் எப்படியும் போகவேண்டும். காரைக்குடி நண்பர்கள் இதுபற்றி ரொம்ப புகார் சொல்லுகிறார்கள். ஆனால் வேறு வழியில்லை.

தேரழுந்துளில் ஏப்ரல் மாதம் விழா நடத்தலாம் என்று எண்ணுகிறார்கள். இந்த வருஷம் திருநெல்வேலியில் கட்டாயம் கம்பர் விழா நடத்திவிடவேண்டும். ஜூலை