பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

43


தங்களைப் போன்றவர்களை அழைத்தால் ரஜாநாளில் வரும்படியாகச் செய்யவேண்டும். எளிதாகவும் செய்துவிடலாம். -

பொங்கலுக்கு பூ ஒன்று கொடுத்திருக்கிறீர்கள். வாடாத பூவே என்றென்றும் கமழும்பூவே, புலவர்கள் ராமலிங்க சுவாமிகளைக் கவியென்று அங்கீகரிப்பதில்லை. ஏதோ சாமான்யம் என்று சொல்லி விடுவார்கள். ஒருவேளை பாசுரங்களை நன்றாய் இருக்கிறதென்று கூடச் சொல்லிவிடுவார்கள். கீர்த்தனைப் பகுதியைக் கண்ணெடுத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் அவைகள்தான் அருட்பா, கவி என்பதெல்லாம். தாங்கள் கொடுத்த பாடல் நன்றாய் அமைந்திருக்கிறது. ரொம்ப திருப்தி.

கம்பர் விழாவைக் கொண்டாடவேண்டும் என்று தீர்மானித்தது பற்றி ரொம்ப சந்தோஷம். நாம்தான் ஆரம்பித்தோம். ஒரு விழாவைச் சிறந்த விதமாகவும் நடத்தினோம். தரிசு விழுந்துவிட்டது எப்படியோ. இந்த வருஷம் எப்படியாவது நடத்திவிடவேண்டியதுதான். மார்ச்சு மாதம் 11க்குப் பிறகு ஒட்டி வைத்தால் எனக்கு வர செளகரியமாக இருக்கும். செட்டிநாட்டுக்கும் போய்விட்டு 27.1.41 அன்று மாலை 7.30 மணிக்கு ரயிலில் திருநெல்வேலிக்கு வருகிறேன். ஒருநாள் வண்ணார்பேட்டையில் தங்க உத்தேசம். எல்லாவற்றையும் பற்றிக் கலந்து கொள்ளலாம் ஜாகை ஆவுடையப்பப் பிள்ளையவர்கள் வீட்டில்.

கலிங்கத்துப்பரணி பற்றிய பேச்சு ரொம்ப ரத்னச் சுருக்கமாய்ப் போய்விட்டது என்று தாங்கள் சொன்னீர்கள். அப்படியேதான் பல நண்பர்களும் சொன்னார்கள். ஆனால் விஷயம் வேறு. கலிங்கத்துப்பரணி பற்றி மூன்று பேச்சும் பேச வேண்டும் என்று ஏற்பாடு. அன்று நடந்தது முதல் பேச்சு. அதாவது முகவுரை. அடுத்தது 11.2.41 அன்று.