44
ரசிகமணி டிகேசி
கடைசியாயுள்ளது 11.3.41 அன்று மூன்றையும் வைத்து ஒருவகையாகச் சமாளிக்கலாம் என்றுதான் வகைப்படுத்தினேன். மூன்றையும் கேட்டால் சாமான்யமாகத் தமிழ் இலக்கியப் பயிற்சி இல்லாதவர்களுக்கு நூல் விஷயமும் ஒரு வகையாக அதன் நயமும் தெரியவரலாம் என்ற எண்ணத்தோடுதான் பேசுகிறேன். தாங்கள் குறித்த பாட்டு (பொருதடக்கை வாளெங்கே) எளிமையுள்ளது, பாவமும் நிறைந்த பாட்டு. முந்தின இரண்டு பாட்டுகளில் உண்மையான உணர்ச்சிப் பாவம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மூன்றாவது பாட்டிலுள்ள எளிமையில்லை. அதற்குத்தக்கபடி பாவத்தின் வேகம் குறைவுதான். தாங்களும் ராமலிங்கம் பிள்ளையவர்களும் பேச்சைக் கேட்டது பற்றி ரொம்ப சந்தோஷம். அத்தகைய நண்பர்களும் தமிழ்ப் படையில் சேர வேண்டியதுதான். ரொம்ப சந்தோஷம்.
இங்கு செல்லையா முதலான யாவர்களும் தங்கள் பொங்கல் பாடலையும் கழகத்தையும் அனுபவித்தார்கள். செல்லையாவுக்கு உடம்பு மெள்ளத் தேறி வருகிறது.
தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்
குறிப்பு
ராவ் சாகிபு ஐ.பி.எஸ். அங்கு வந்தால் 27.1.41 அன்று வண்ணார்பேட்டைக்கு வருகிறேன். என்று தெரிய செய்ய வேண்டும்.
❖❖❖