பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ரசிகமணி டிகேசி
ஏரோ
மீனம்பாக்கம்
16.9.41

நண்பர் பாஸ்கரத்தொண்டைமான் அவர்களுக்கு,

தங்கள் ரசமான கடிதம் கிடைத்தது. தாங்கள் இங்கு வருவது பற்றி ரொம்ப சந்தோஷம். 20 ஆம் தேதி காலை ரயிலில் எப்படியும் தங்களை எதிர்பார்க்கிறேன். மறுநாள்தான் நான் சிதம்பரம் போகிறேன். தமிழ்ப்பண்ணை ரொம்ப ஆவலோடு தங்களை எதிர்பார்க்கிறது. தமிழ்ப்பண்ணை சென்னையில் இருந்தாலும் திருநெல்வேலி ரிவினியூ ஜாகை ரிஜிஸ்டிரேஷனைச் சேர்ந்ததாகவே தெரிகிறது. தென்காசியில் என் வீடு சில வருஷங்களுக்கு முன் வரையும் அம்பாசமுத்திரம் தாலுகாவைச் சேர்ந்ததாய்த்தான் இருந்தது. அதுபோலத் தமிழ்ப் பண்ணையில் பங்கு எடுத்துக் கொள்பவர்களில் (எல்லாரும் அல்ல) முக்கால்வாசிப்பேர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள்தான். தரிசு விழுந்தால் என்னைப் போட்டுவிடுகிறார்கள். பி.ஸ்ரீ. மகரம், சீனிவாசக ராகவன், மு. சுப்பிரமணியபிள்ளை, வையாபுரிபிள்ளை, கே. பாலசுப்பிரமணிய ஐயர் (கலியாணம் திருநெல்வேலி), தம்பி ம. சந்திரசேகரன், தாங்கள். ஒன்பது பேர் செங்கல்பட்டு ஜில்லாவுக்குள். திருநெல்வேலி ஜில்லா எப்படியோ திருநெல்வேலி பேரைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

சீதா கலியாணம் எனக்கும் கிடைத்திருக்கிறது. அழகாக அச்சிட்டு விருந்தினருக்கு வழங்கியிருக்கிறார்கள். விருந்தினரும் ரொம்ப ஆர்வத்தோடு ஏற்றிருப்பார்கள். கம்பரை எல்லாரும் அறிந்துவிடவேண்டும் என்ற நோக்கம் இந்த மாதிரி வெளியீடுகளில் இருக்க வேண்டியதில்லை. கம்பரோ ஒரு கடல். அதோடு கண்ணாம்பொத்தி விளையாடுகிற கடலாயிருக்கிறது. சாமானிய மக்களை