பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ரசிகமணி டிகேசி
வண்ணார்பேட்டை,
திருநெல்வேலி
8.5.42

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நேற்று இரவு ஒரு மணிக்கு இங்கு வந்து சேர்ந்தோம். காலை 6 மணி வரையும் கணேசன் அவர்களும் சிதம்பரம் அவர்களும் நன்றாய்த் தூங்கினார்கள். தோசை காப்பியெல்லாம் ஸ்ரீனிவாசராகவனுடன் இருந்து சாப்பிட்டார்கள். 8.30 மணி பஸ்ஸில் ஏறி நாகர்கோயிலுக்குப் போயிருக்கிறார்கள். நாளைக் காலை இங்கே திரும்புகிறார்கள். நாளை மத்தியானமோ சாயங்காலமோ இங்கிருந்து புறப்பட்டு விட வேண்டும் என்று சாதிக்கிறார்கள்.

வி.பி.எஸ் அவர்கள் இன்று சிறு காலையில் புறப்பட்டுப் போயிருப்பார்கள். தஞ்சாவூரில் ஒருநாள் தங்கினால் போதும் என்று சொல்லியிருக்கிறேன். ஏதோ சொல்லிவிட்டிருக்கிறோம். சொல்வதைக் கேட்டால் தானே. போர் முனைக்குப் போகத் தயாராய் இருக்கிற மாதிரி தோன்றுகிறது அவர்கள் படபடப்பு.

தேரழுந்துரில் வருகிற ஜூன் மாசம் 2, 3 தேதிகளில் கம்பர் விழாவைக் கொண்டாட மருத்துர் கந்தசாமிப் பிள்ளை அவர்களும் மற்றவர்களும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தங்களைக் கட்டாயம் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என்று அவர்ளும் பாலகிருஷ்ண பிள்ளையும் எழுதியிருக்கிறார்கள். கணேசன் ஸ்ரீனிவாசராகவன் மூவரும் தேரெழுந்துருக்கு வர இன்று காலையிலேயே திட்டம் போட்டுவிட்டார்கள். தாங்களும் இப்பொழுதே திட்டம் போட்டால் நல்லது.

சங்கரன்கோயிலில் தமிழ்ச் சங்கத் திறப்பு விழா ஒரு மாநாடு போலவே நடந்தேறியது. ஏதோ நம்முடைய பாக்கியந்தான். சா. கணேசன், ஸ்ரீனிவாச ராகவன் அங்கு