பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் 6 :

திருக்குற்றாலம் திருநெல்வேலி ஜில்லா 13.8.44 அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

ரொம்ப சந்தோஷம். இங்கு வந்ததுதான் தெரிந்தது. திருநெல்வேலிக்கே ஆர்.டி.ஒவாகத் தங்களை நியமித்தது பற்றி அளவிறந்த திருப்தி பொதுவாக நம்மவர்களை டிப்டி கலெக்டர் பதவியில் நியமிப்பதென்றால் எட்டாத்தொலைவில் அதிலும் தமிழ் வாசனையே இல்லாத ஜில்லாவில் கொண்டுபோய் போட்டு விடுவார்கள். அவர்களுக்கு எதற்கடா இந்தப் பதவி என்று தோன்றும். நண்பர்களுக்கும் அப்படியே தோன்றும்.

தாங்கள் திருநெல்வேலியிலேயே இருப்பதால் தமிழும் கம்பரும் பயன்பெற வசதியுண்டு. விசாகப் பட்டணத்தில் எப்படி இருந்தால்தான் என்ன, வாமன பத்தியத்துக்கு விளக்கம் ஏற்பட்டுவிடும் தங்களால். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். -

இப்போதுள்ள தேகபலம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். இருக்கும். செய்யவேண்டிய சேவையையும் திருந்தச் செய்வீர்கள். ஜில்லாக் கலெக்டராகவும் வேலை பார்ப்பீர்கள். எல்லாவற்றிற்கும் இறைவனது அருளை வேண்டுகிறேன். - -

அருமை ராஜேஸ்வரிக்கு என் அன்பு.

தங்கள் - டி.கே. சிதம்பரநாதன் குறிப்பு : எனக்குச் செய்யவேண்டிய பல் வைத்தியம் செய்தாகிவிட்டது. உடம்புக்கு செளக்கியம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு வாரம் இங்கு தங்க வேண்டியிருக்கும்.