பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

ரசிகமணி டிகேசி


திருக்குற்றாலம்
திருநெல்வேலி ஜில்லா
20.9.44

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

திருச்சியில் ரேடியோ பேச்சு தங்களுக்கு இருந்தது தெரியும். பேசுகிற நேரத்தில் கோமதிநாயகம் பிள்ளை அவர்கள் வீட்டில் தாம்பூலம் வாங்கிக்கொண்டும் கல்யாணத்தை விசாரித்துக்கொண்டும் மேளத்தைக் கேட்டுக் கொண்டும் இருந்தோம். அதனால் தங்கள் பேச்சைக் கேட்க வசதியில்லாமல் போய்விட்டது.

மறுநாள் திருநெல்வேலி திரும்புவீர்கள் என்று எண்ணினேன். விசாரித்ததில் சென்னைக்குச் சோமுவுடன் போயிருப்பது தெரியவந்தது. எப்படியும் 17.9.44 அன்று வீட்டிலிருப்பீர்கள் என்று எண்ணி வீட்டுக்குப் போனேன். தாங்கள் இல்லை. அதனால் ஏமாற்றம் ஒன்றும் இல்லை. அருமை ராஜேஸ்வரியும் அம்மாளுந்தான் இருந்தார்களே. அவர்கள் என்னை லேசில் விடுவார்களா. பால் காய்ச்சிச் சாப்பிடச் செய்தார்கள். மத்தியானம் பனிரெண்டு மணிக்கு சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் பால் சாப்பிடுவது இயல்பான காரியமா அல்ல. அதனால்தான் கட்டாயம் வேண்டியிருந்தது. வெகுநேரம் பேசிக்கொண்டும் இருந்தேன். பெண் கல்வி பற்றிய பேச்சும் ஊடாடிற்று. எல்லாம் வெகு ரசமாய் இருந்தது. தாங்கள் 18 ஆம் தேதி வருவதாகச் சொன்னார்கள். நான் எப்படியும் 18 ஆம் தேதி காலை புறப்பட வேண்டியிருந்தது. புறப்பட்டு வந்துட்டேன்.

புறப்படும்போது நான் கே. பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் வர இயலாது என்று கடிதம் ராஜேஸ்வரிக்கு வந்திருப்பதாகத் தெரியவந்தது. இங்கும் எனக்குக் கடிதம் வந்திருக்கிறது. தாயாருக்கு சிரார்த்தம் வருவதால்