பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

63


திருநெல்வேலிக்கு வர இயலவில்லை என்று எழுதியிருக்கிறார்கள். மிக வருந்தியே எழுதியிருக்கிறார்கள். வாஸ்தவத்தில் தாங்கள் நடத்துகிற விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ரொம்ப ஆசை. தங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். என்னையும் தங்களுக்கு எழுதச் சொல்லுகிறார்கள்.

அவர்கள் குமாரத்தியும் மாமனார் திவான்பகதூர் ஏ.வி. இராமலிங்க ஐயர் அவர்களும் குற்றாலத்தில் தான் இருக்கிறார்கள். 1.10.44 வாக்கில் தானும் இங்கு வந்து சில நாள் தங்குவதாகவும் எழுதியிருக்கிறார்கள். எப்படியும் நமக்கு ஏமாற்றந்தான். அவர்கள் திருநெல்வேலிக்கு வருவதாயிருந்தால் புதுர் ஜமீன்தார் சீனிவாச ராவ் அவர்கள் வீட்டில் ஜாகை ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஆவுடையப்பப் பிள்ளை அவர்களும் நானுமாகப் பேசி முடித்திருந்தோம்.

கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ஆவுடையப்பப் பிள்ளை அவர்களின் வீட்டிலேயே தங்கலாம். நானும் உடன் தங்குகிறேன்.

தங்கள் விழா பிரதமாதமான விழாதான். இந்து காலேஜ் பின் முற்றம் ரொம்பவும் பொருத்தமான இடந்தான்.

25 ஆம் தேதி நான் திருநெல்வேலி ஜங்ஷன் வந்து சேருகிறேன். அதாவது மலை ரயிலில். தே.வியும் அன்றே வண்ணார்பேட்டை வந்துவிடும்படி செய்யவேண்டும். அப்படியானால் தானே இளைப்பாற முடியும்.

சேலத்திலிருந்து ரங்காச்சாரி வருகிறார். இங்கே தாங்கள். வருவதாக ராஜேஸ்வரி சொன்னாள். எப்போதோ?

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்