பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 ரசிகமணி டிகேசி

ஆசை திரும்படி கவிஞரைக் கொண்டு வந்து காட்டினர்கள். அருமையான வாழ்த்துப் பத்திரம் அழகான முறையில் அமைத்துக் கொடுத்தீர்கள். இதில் எல்லாம் கவிஞருக்கும் குடும்பத்தாருக்கும் எவ்வளவோ திருப்தி, அதைவிட ஒருவகையில் வந்திருந்த கலைஞருக்குத் திருப்தி அதிகம்.

தங்கள் மூலமாகத் திருநெல்வேலி தமிழ்க் கவிதைக்குச் செய்ய வேண்டிய கடமையை நன்றாய் செய்துவிட்டது.

கவிஞரோடு என்னையும் சேர்த்து ரொம்ப பாராட்டிவிட்டீர்கள். எல்லாவற்றிற்கும் என் மனமார்ந்த நன்றி.

படங்கள் வந்தன. உருவங்கள் நன்றாய் விழுந்திருக்கின்றன. தே.வி. அவர்களது உருவம் மூன்று படத்திலும் திருப்தியாய் விழுந்திருக்கிறது. தாங்கள் ராஜேஸ்வரி மற்ற சகோதர சகோதரிகள் எல்லாரும் கூட்டுப் படத்தில் வெகு துலாம்பரமாகவும் அழகாகவும் இருக்கிறார்கள். கூட்டுப்படம் ரொம்ப வாய்ப்பு. கூட்டுப்படம். வாய்த்தல் பொதுவாக அருமை.

தீபாவளி மலருக்கான வேலை தீவிரமாய் நடக்கிறது. கல்கி அவர்களுக்கு ஒரே வேலைதான். இருபத்தைந்து மணி நேரமும் வேலை என்று சொல்லலாம். இந்த சிரமம் எல்லாம். மலரில் தெரியவா போகிறது. அது என்ன ஒரே அழகாய் இருக்கும். நமக்கு சந்தோஷமாய் இருக்கும். மற்றதைப் பற்றி நமக்கென்ன கவலை. படங்கள் அற்புதமாய் இருக்கும் என்றுதான் சொல்ல முடியும். ஒவ்வொரு படத்தோடுமே கொடுக்கிற விலை சரியாய்ப் போய்விடும்.

தங்களுக்கு ரெம்ப சிரமம். ராஜேஸ்வரிக்கு சிதம்பரத்துக்கு மற்றும் உத்யோகஸ்தர்களுக்கும் ரொம்ப சிரமம். சிரமத்தால் ஒரு பாதகமும் இல்லை. சிரமத்துக்கு