பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

5


நண்பர் தொண்டைமானுக்கு எழுதிய எல்லாக் கடிதங்களிலுமே 'வட்டத்தொட்டி'யைப் பற்றிய செய்தி வந்திருப்பது, அதை நிரூபணம் செய்கிறது. ரசிகமணிக்கு வட்டத்தொட்டியின் மீது எவ்வளவு ஆர்வமும் அக்கரையும் இருந்தது என்பதையே அந்தக் கடிதங்கள் நன்கு உணர்த்துகின்றன.

ரசிகமணி டிகேசியுடன் தொண்டைமானுக்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகவே பழக்கம். குற்றால முனிவராக, ரசிகமணி குற்றாலத்தில் குடியிருந்த காலத்தில், கிட்டத்தட்ட வாராவாரம் அவர்களைப் போய்ப் பார்த்து, உடனிருந்து, உறவாடி, உரையாடி மகிழ்வார். அப்படிப் போக முடியாத சமயங்களில்தான் கடிதங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அப்படி ரசிகமணி தொண்டைமானுக்கு எழுதிய கடிதங்கள் அறுபதுக்கு மேல் இருக்கும். அவற்றில் கிடைத்தவற்றை மட்டுமே தொகுத்து வெளியிட்டிருக்கிறேன்.

தொண்டைமான் அவர்களே- ரசிகமணியுடன் தனக்குள்ள தொடர்பின் அடிப்படையில், ரசிகமணி டிகேசி என்று ஓர் அருமையான புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்த நூல் கல்லூரிகளில் பாடமாகவும் அமைந்திருக்கிறது. ரசிகமணியின் தமிழ்க் காதல், கம்பன் பக்தி, கலை அறிவு, பண்பாடு எல்லா வற்றுக்கும் சரியான வாரிசு நமது நண்பர் பாஸ்கரன்தான் என்று அந்த நூலைப் படித்துவிட்டு பேராசிரியர் கல்கியே சொல்லியிருக்கிறார் என்றால் அதிகம் சொல்வானேன்.

ரசிகமணி டிகேசி என்ற நூல் மட்டுமன்று, ரசிகமணி தம் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களையும் திரட்டி, அவற்றிலிருந்து பலவற்றைத் தேர்ந்தெடுத்து, ரசிகமணியின் கடிதங்கள் என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் வெளியிட்டிருக்கிறார். மூதறிஞர் இராஜாஜியிலிருந்து, கவிமணிதேவி, திருப்புகழ்மணி, டாக்டர் திருமூர்த்தி, பேராசிரியர் கல்கி, ஜஸ்டிஸ் மகாராஜன், மீ.ப.சோமு, என