பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்


கம்பன் பாடல்களும் அப்பளம் போலத்தான். பிழைபட்ட பாடம் இருந்தால் பாடல் மிச்சந்தானே. கல்லை எப்படி எடுக்கலாம் நீ என்று கோபிக்கிறார்கள்.

அனேகர் இந்த விஷயங்கள் சம்பந்தமாக வாய் எடுத்துப் பேசப் பயப்படுகிறார்கள். டிகேசி ராமாயணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று வாய் தவறிச் சொல்லிவிட்டால் எங்கே ஜனங்கள், ராமாயணத்தை எழுதினது கம்பர் அல்ல. டிகேசிதான் என்று தப்பாய் எண்ணிவிடுவார்களோ என்று பயம். கம்பரிடத்தில் எவ்வளவு விஸ்வாஸம் பாாத்தீர்களா. டிகேசியைக் குறைவாய் மதிக்கிறேன் என்பதல்ல, கம்பரை அதிகமாய் மதிக்கிறேன் என்பதுதான் விஷயம்.

தாங்களுக்கு இப்படியெல்லாம் சூத்திரங்கள் செய்யத் தெரியவில்லை. செருகு கவிகளை அகற்றியது பற்றியும் பாடல்களைத் திருத்தியது பற்றியும் மிக்க அனுதாபத்தோடு பாராட்டிப் பேசியிருக்கிறீர்கள். தாங்கள் சொன்னால் போதுமே எனக்கு. பண்டித உலகம் ஸ்காலர் உலகம் எல்லாம் சேர்ந்து கருத்த செண்டாவைப் பிடித்து வானத்தைமூமுடட்டுமே.

மோனைக் கொடிகளின்
காடு, நெடுவெளி
மூடி, அடங்கலும்
ஒடி யிருண்டபின்,
ஏனைச்சுடர்விரி
இடப கேதனம்
எழுந்து திசைதிசை
விளங்கவே

- குறவஞ்சி

இருட்பிழம்புக்குள் கிழித்துக் கொண்டு வருகிறது தங்கள் பாட்டு. சி.ஆர். அவர்களின் பாட்டு, கல்கியின் பாட்டு கவிஞர் தே.வி.யின் பாட்டு இவைகளின் ஒளி.