உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ரசிகமணி டிகேசி


ஒளியின் அழகை அனுபவிப்பதற்கு இருட்டு எவ்வளவு அவசியம் தெரிகிறதா?

ராஜேஸ்வரியின் நடிப்பு நல்ல தோரணையிலிருந்தது. சகாக்களைக் கூட்டுவதற்கு அவளுக்கு அபாரமாய்த் திறம் இருக்கிறது. அந்தப் பெண்களை எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒத்துழைக்கச் செய்கிற காரியம் எளிதா?

வந்தனோபசாரம் சொல்லுவது எப்பொழுதும் கஷ்டம். அதற்கு வேண்டிய நன்றி பாவம் நமக்கு வருவதில்லை. ராஜேஸ்வரிக்கு வெகு தெளிவாய் வந்தது. எல்லாவற்றையும் விட அவள் என்னிடம் காட்டிய அன்பும் பரிவும் வெகு அழகு. அருமைப் புதல்விக்கு என் மனமார்ந்த நன்றி.

மற்றவை பின்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


குறிப்பு - 7.10.4 அன்று இங்கிருந்து குற்றாலத்துக்குப் புறப்பட உத்தேசம்.

❖❖❖