பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

ரசிகமணி டிகேசி
திருக்குற்றாலம்
திருநெல்வேலி ஜில்லா
3.3.45

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தாங்கள் வெள்ளியன்றே வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். நேற்றும் எதிர்பார்த்தேன். வரவில்லை. விசாரணைகளைத் தள்ளிப் போட்டுவிட்டீர்கள் என்று தெரிகிறது. இருக்கட்டும். அடுத்தவாரம் பார்த்துக் கொள்ளுகிறது.

கல்கியின் பாட்டு, பிரதிநிதி கச்சேரி எல்லாம் சேர்ந்து திருச்செந்தூர் விழாப் போட்டி விழாவாகப் போய்விட்டது. உத்யோகஸ்தர்கள் எல்லாரும் திருச்செந்தூருக்குப் போய்விட்டார்கள். கவலை இல்லை தாங்கள் இருந்தீர்கள் அதுபோதும்.

எல்லா விஷயமாகவும் கல்கிக்கும் சதாசிவத்துக்கும் ரொம்ப திருப்தி. அவர்கள் இருவரும் பாரதி நிதிக் கச்சேரிக்காக எடுத்துக் கொண்ட சிரமம் இவ்வளவு அவ்வளவென்றில்லை. வசூல் ஒரு மாதிரிதான். ஆனால் அதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. செம்பை செளடய்யாக் கச்சேரி ரொம்ப வாய்ப்பாய் இருந்தது. சபையும் நிறைந்த சபையாய் இருந்து அனுபவித்து விட்டார்கள். சிரமத்திற்கும் கையிலிருந்து செலவழித்த செலவுக்கும் போதுமான பலன் வந்ததென்றே கருதினார்கள் கல்கி நண்பர்கள்.

எப்படியோ கல்கி காரியாலயமும் செட்டிநாட்டு ராஜாங்கமும் திருநெல்வேலி விஷயமாய்த் தனிப்பட்ட அக்கறை காட்டி வருகிறார்கள். நம்முடைய ஜாதகம் நல்ல ஜாதகம். வேறு என்ன சொல்ல.