உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ரசிகமணி டிகேசி


பலதரப்பட்ட நண்பர்களுக்கும், தம்மிடம் அன்பு காட்டிய பெண் குழந்தைகளுக்கும் எழுதிய கடிதங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன. அதைத் தொடர்ந்து, சென்னை 'வட்டத் தொட்டி'யின் வெளியீடாக, ஜஸ்டிஸ் மகராஜன் அவர்களின் ஒரு தொகுப்பு வெளிவந்திருக்கிறது. ரசனையின் ஒலி என்ற தலைப்பில் திருச்சி நண்பர் ஜி.ஸி.பட்டாபிராம் ஒரு தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். 'பேசும் கடிதங்கள்' என்ற தலைப்பில், தொண்டைமானுடைய புதல்வி ஒரு சிறு தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்.

ரசிகமணியவர்களுக்கு எழுத்தைவிடப் பேச்சிலே தான் ஆர்வமும் நம்பிக்கையும் அதிகம். இதய ஒலி, கம்பன் யார், அற்புதரசம், கம்பர் தரும் காட்சி என்று அவர்கள் எழுத்தின் பட்டியல் நீண்டாலும் கூட, அவர்கள் பேசிய பேச்சுக்களுக்கு ஈடு கொடுக்க முடியாது. ஆனால் அவர்களுடைய கடிதங்கள் அந்தக் குறையை நீக்கிவிடும். டிகேசியின் ஆழ அகலங்களையும், அவரது ஆளுமையையும் அவரது கடிதங்களில் தான் காண முடியும் என்று ஜஸ்டிஸ் மகராஜன் அவர்கள், தீர்மானமாய் சொல்வார்கள். நீதியரசரே சொல்லிவிட்ட பிறகு வேறு யார் என்ன சொல்ல முடியும்?

ராஜேஸ்வரி நடராஜன்


❖❖❖