பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

ரசிகமணி டிகேசி


அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

எனக்கு இரண்டு மாதமாக உடம்பு பலவீனமாகவே இருந்தது. வசூரிக்கு பிறகு உடம்பு தேறுவது கஷ்டந்தானே. இங்கு வந்ததும் ராஜாஜி கல்கி முதலிய நண்பர்கள் இன்சுலின் இன்ஜெக்ஷன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டார்கள். டாக்டர் கோபால கிருஷ்ணய்யரோ தினம் தினம் வீட்டுக்கு வருகிறார். நீரை உடனே சோதித்தார். 4% சர்க்கரை இருந்தது. மறுநாள் கட்டாயம், வாயையும் காலையும் கட்டியாவது, இன்ஜெக்ஷன் செய்துவிடுவதாகச் சொல்லிவிட்டுட்ப போனார். 15.8.45 அன்று இன்ஜெக்ஷன் கொடுத்தார். மறுநாள் உடம்புக்கு செளகரியம் ஏற்பட்டது. மாலையில் எழுத்தாளர் சங்கத்திலும் பேசினேன். திடமாகவும் தாட்டியாகவும் பேச்சு இருந்துவிட்டது.

பக்கத்திலிருந்த கல்கி இதைப் பார்த்துவிட்டார்கள். அப்படியே மீட்டிங் முடிந்ததும் ராஜாஜியிடம் போய்க் கோள் சொல்லி விட்டார்கள். இன்ஜெக்ஷனால டிகேசிக்கு உடம்பு குணப்பட்டுவிட்டது என்பதாக. மறுநாள் சதியாலோசனை. 17 ஆம் தேதி மாலை நான் ரயிலுக்குப் புறப்படுகிற நேரம் ராஜாஜியும் கல்கியும் இங்கேயே இருந்து கால் மண்டலம் இன்ஜெக்ஷன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார்கள். குற்றாலத்துக்குப் போய் அங்குள்ள டாக்டரிடம் இன்ஜெக்ஷன் எடுத்துக் கொள்ளுகிறேன் என்று எவ்வளவோ தாவாப் பண்ணிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கோ என்னிடம் நம்பிக்கை இல்லை.

அந்தவேளை சதாசிவம் களத்தில் காட்சி கொடுத்தார்கள். சரிசரி ரயிலுக்குப் புறப்படலாம் டாக்டர் கோபால கிருஷ்ணய்யரும் கூடவே வருகிறார். குற்றாலத்திலேயே இஜ்செக்ஷனைச் செய்து முடித்துவிட்டு இங்கே திரும்புவார் என்று ஒரு போடு போட்டார்கள் - அட்டாமிக் பாம் போட்ட