பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

ரசிகமணி டிகேசி




திருக்குற்றாலம்
தென்காசி
19.9.45

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நேமத்தான்பட்டியிலிருந்து கிருஷ்ணன் செட்டியார் அவர்களும் மனைவியாரும் வந்திருக்கிறார்கள். உடன் தங்குகிறார்கள். ஜாகை மாத்திரம் போடிநாயக்கனூர் பங்களாவில்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் அவசியமானால் ஜாகைக்கு போடி பங்களா இருக்கிறது. அருமை ராஜேஸ்வரியையும் கோபாலபிள்ளை அவர்களையும் அவர்களது செல்வக் குமாரத்தியையும் வசதியாக இருக்கச் செய்வதற்கு என்பதைத் தெரியப் படுத்தத்தான்.

கொஞ்சம் ஓய்ந்திருந்த சாரல் மறுபடியும் ஆரம்பித்திருக்கிறது. குற்றாலத்துக்கு ஜோர் கிளம்பிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

செப்டம்பர் இண்டர்மீடியட் எக்ஸாமினேஷனைத் தீர்த்துவிட்ட நகரத்தார், மற்றவர் நாயுடு, குற்றாலத்தில் சிலநாள் தங்கலாம் என்றுதான் வந்திருக்கிறார்கள். முதலில் கொஞ்சம் பயந்தார்கள். பிறகு தைரியம் ஏற்பட்டு என்னைப் பார்க்க வந்துவிட்டார்கள். தமிழ்ப் பாடப் புத்தகம் ஆசிரியர்களது இருள் விளக்கம், பரீட்சை இவைகளுக்குள்ளிருந்து வெளிவந்தவர்கள். தமிழ் என்பது பயப்பட வேண்டிய காரியந்தானே. ஆனாலும் எப்படியோ என்னைப் பார்த்துவிடவேண்டும் என்று துணிந்து வந்துவிட்டார்கள்.

தமிழ் இன்னது, சைவம் இன்னது, தேசிக விநாயகம் பிள்ளை இன்னார் அவர்களது கவிகள் இப்படி என்பதை