பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

85


மேல் காளமேகம் என்று சொல்லுவதைக் காதாரக் கேட்டிருக்கிறோம். இந்த விஷயம் பற்றிக் கடிதத்தில் எழுத ஆரம்பித்தால், விஷயமே பேசுகிறது என்று சொல்லலாந்தானே. கடிதத்திலும் இலக்கியத் திலுந்தான் இப்படிச் சொல்லுவது பொருந்தும். ஆனால் சையன்ஸ் சம்பந்தமாக அவ்வளவாக பொருந்தாது. அதிலும் பொருந்துவிதமாக காணப்பட்டுவிட்டால் இலக்கியமாய்ப் போய்விடும் அது.

ராஜேஸ்வரியின் கடிதத்துக்குப் பதில் எழுதுவதை ஒற்றிப் போட்டுவிட்டு கடிதத்திலிருந்து இவ்வளவு நீண்டு போகிறது, வியாக்கியானம். இருக்கட்டும்.

19.10.45 அன்று போட் மெயிலில் ஏறி எட்டயபுரம் போகிறேன். 21 ஆம் தேதி ராஜாவின் பிறந்தநாள். அன்று எட்டயபுரம் கோயிலை ஹரிஜனங்களுக்குத் துறந்து வைக்கப் போகிறார்கள் ராஜா. அதற்காக ராஜாஜியும் வருகிறார்கள். 23 ஆம் தேதி பிற்பகல் கோயில்பட்டியிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி வருகிறேன். 22 ஆம் தேதி கோயில்பட்டியிலேயே தங்க உத்தேசம். சுப்பராயிலு நாயுடு அவர்களைப் பார்த்துவிட்டு வர உத்தேசம்.

ஆகவே 23 ஆம் தேதி சாயங்காலம் வண்ணார்பேட்டை வந்து சேருகிறேன். தங்களை ராஜேஸ்வரியை எல்லாம் பார்க்க ஒருநாள் வசதி வைத்துக்கொண்டு வருகிறேன்.

22 ஆம் தேதியே வருவதாக ஆவுடையப்பப் பிள்ளை அவர்களுக்கு எழுதியிருந்தேன். அப்படி அல்ல 23 ஆம் தேதி மாலைதான் வருகிறேன் என்று தகவல் கொடுத்துவிடவேணும் அவர்களுக்கு. -

தாங்கள் 19 ஆம் தேதி ஆரல்வாய்மொழியிலிருப்பதாக அழைப்பிலிருந்து தெரியவருகிறது. ரொம்ப சந்தோஷம்.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்