பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


86 . ரசிகமணி டிகேசி

திருக்குற்றாலம் தென்காசி 13.11.45

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நாளை நின்று 15 ஆம் தேதி சென்னைக்குப் போகிறேன். வர ஒரு வாரம் 10 நாள் செல்லலாம். -

யோக்யதையான படம் மீரா. ஆடவர் பெண்டிர் எல்லாரும் இருந்து பார்க்கக்கூடிய படம் மீராதான் என்று தாங்கள் சொன்னீர்கள். -

தங்கள் அபிப்ராயத்துக்கு ஏன் விளம்பரம் கொடுக்கக்கூடாது என்று கேட்கிறேன்.

நம்முடைய கலைக்கழகம், மகளிர் கழகம் இன்னும் எத்தனையோ கழகங்கள் இருக்கின்றன. அவைகளில் எல்லாம். தங்கள் அபிப்ராயத்தைத் தீர்மானமாகப் போட்டுப் பத்திரிகைகளுக்கு அனுப்பவேணும். சதாசிவத்துக்கும் அனுப்பவேணும். எப்படி உபயோகப்படுத்த வேண்டுமோ அப்படி உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள்.

ஆவுடையப்பப் பிள்ளை அவர்களுக்கும் எஸ். ஏ. பொன்னையாப்பிள்ளைக்கும் எழுதியிருக்கிறேன். அவர்களையும் கலந்து செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். அருமைப் புதல்வி ராஜேஸ்வரியும் மகளிர் கழகத்திலிருந்து தீர்மானம் போடவேண்டும். உடனேயே செய்ய வேண்டும்.

- தங்கள் டி.கே. சிதம்பரநாதன் குறிப்பு - அபத்தப்படந்தான் தமிழர்களுக்கு வேண்டும் என்ற கொள்கை, பிரச்சாரம் எல்லாம் ஒழிய வேண்டும் அல்லவா. அதற்குத்தான் இந்த வேலை எல்லாம்.