பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

89
திருக்குற்றாலம்
தென்காசி
13.2.46

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் புத்தகம் சம்பந்தமாக மகராஜன் கும்மாளி போட்டு எழுதியிருக்கிறார்கள். அது இத்துடன். எனக்கும் வேறு எழுதியிருக்கிறார்கள்.

தமிழுக்கே புதுமையான நூல் என்று அழகாய் எழுதியிருக் கிறார்கள். வாஸ்தவந்தான். கதாநாயகன் இத்தனை அடி உயரம் தையல்காரர் கொடுத்த கழுத்தளவு, கையளவு, நெஞ்சளவு இப்படி சொல்லேர் தராசில் நிறுத்த கணக்குப்படி இத்தனை மடங்கு ராத்தல் என்றெல்லாம் எழுதலாம். தாங்கள் எழுதவில்லை அல்லவா. மகாராஜ பிள்ளையவர்களது போக்குக்கு ஒத்த புத்தகந்தான்.

ஆசைக்கோர் அளவில்லை. அது வரவில்லை. இது வரவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது என்று சொல்லுகிறார்கள். அவர்களே அப்படித் தோன்றுவது பிசகுதான் என்றும் முடித்தும் விடுகிறார்கள்.

அப்படியெல்லாம் எழுத ஆரம்பித்தால் பக்கம் 1500 ஆக ஆகி விடும். பிறகு சரஸ்வதி பூஜை அன்றுதான் கையில் எடுப்பார்கள். தூசி தட்டிப் புத்தகங்களோடு புத்தகமாய் அடுக்குவார்கள். சகலகலாவல்லி மாலையையும் படித்துத் தீர்த்துவிடுவார்கள்.

இப்போதுள்ள அளவே அளவு என்று படுகிறது. புத்தகத்துக்கு அடிபிடியாய் அல்லவா இருக்கிறது.

சோமுவும் அவன் கதையை விடுகிறான். புத்தகம் காரணமாக மூன்று இஞ்சு அதிகமாக வளர்ந்திருப்பான் போலத் தோன்றுகிறது.