பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

ரசிகமணி டிகேசி


திருவனந்தபுரத்தில் தமிழ்ப் பணியாற்ற முடிந்ததல்லவா. ரொம்ப சந்தோஷம்.

தனியாக இருந்த திருப்புகழ் மணியின் பஜனையையும் - கேட்டுவிட்டீர்கள். மற்ற கோலாகலங்கள் இருக்கவே செய்கின்றன.

தாங்கள் மார்ச்சு மாதம் மூன்றாவது வாரத்தில் இங்கு ஜோலி வைத்திருக்கிறீர்கள். சகல செளகரியங்களும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். கஷ்டமே இல்லை.

கல்கி அவர்களுக்கு உடம்பு சுமாராய் இருக்கிறது. தாம்பரத்தில் போய் ஒருவாரம் பத்து நாள் தங்கி வரலாமா என்ற யோசனை நான் ஊருக்குத் திரும்புவதை பற்றி ஜோஸியரிடம் கேட்டுத் தெரிய வேண்டும்.

வீட்டில் ராஜேஸ்வரி, அம்மாள் மற்றவர்கள் எல்லாரும் செளக்கியந்தானே.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖