பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் 97

கல்கி 30.4.46

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

27 ஆம் தேதி கடிதம் கிடைத்தது. கம்பர் கோயில் விஷயமான நடவடிக்கையை ஆகஸ்டுக்கு ஒற்றிப்போட்டது செளகரியந்தான் என்று தங்களுக்கும் படுகிறது. ரொம்ப சந்தோஷம். - -

கல்கி, எம்.எஸ், சதாசிவம் மூவரும் பம்பாயிலிருந்து நாளை ஆக்ாய விமானத்தில் இங்கு வருகிறார்கள். எம்.எஸ்.ஸின் கச்சேரி பம்பாயில் அபாரமாய் இருந்தது. ரேடியோவில் நானும் முக்கால் மணி நேரம் கேட்டேன். தெய்வகானமாய் இருந்தது. சாரீரம் அநாயாசமாக பாதாளத்துக்கும் வானத்துக்கும் இடையே சஞ்சரித்தது. மனசைப் பறிகொடுத்துத்தான் கேட்க வேண்டியிருந்தது. வடதேசத்து சங்கீத வித்வான்கள் பலரும் கச்சேரிக்குப் போயிருந்தார்கள். அவர்கள் ரொம்ப ரொம்ப பாராட்டினார்களாம். வடநாட்டில் நம்முடைய தமிழ் சங்கீதமே உயர்ந்ததென்று ஆகிவிட்டது. எல்லாம் எம்.எஸ்.எஸ்ஸின் பண்பட்ட தமிழ் சங்கீதத்தினால்தான். தமிழ்நாடு பண்பட்ட நாடு, உயர்ந்த கலைக்கு உரிய நாடு என்று அங்கீகரித்துப் பேசுகிறார்கள். வடநாட்டில் இத்தகைய சங்கீதம் எங்குமே கிடையாது என்கிறார்கள். ஆனால் சென்னையில் உள்ள சிலர்தான் உண்டு என்று சொல்லுகிறார்கள். யானை அனையர் நம்மவர். தன் தலையிலேயே மண்ணை எடுத்துப் போட்டுக் கொள்ளுகிற ஜந்து யானைதானே.

கீழ சூரிய மூலை வெங்கட்டராமய்யர் அவர்களது குமாரன் 13 வயது பையன், சீதாராமன். என்னைப் போன்ற பொடிப்பயல்களையும் கம்பர் வசீகரித்துவிடுகிறார். கம்ப்ர் என்றால் எங்களுக்கெல்லாம் ஒரே குஷி, பாஸ்கரன்