இணையற்ற வீரன் தருணத்தில் மந்திர பலத்தால் பஸ்மீகப்படுத்துகி றேன்' என்று கிளம்பிய மகரிஷியை கான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேனே! அதுபோல எனது உற வினருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்க நீங்கள் ஏன் உடல் பதைக்கவில்லை! உம்மை நான் மணந்ததன் பயன் இதுதானா? 27 ப்ரகலாதன்:- கண்மணி! வருந்தாதே. உன் உறவின ரைக் காப்பேன். சந்தேகியாதே. இக்காட்டினர் அனைவரும் ஒருங்கே என்னை எதிர்ப்பினும் கான் பின்வாங்கப் போவதில்லை. உன் தாயாகும் சிறைப்பட்டார்களா?. உன் சிற்றன்னை முதலிய வர்களுமா சிறைப்பட்டார்கள் ? ஆஹா ! கஜகேது:- மருகரே! உம்மால் முடியாவிட்டால் கூறி விடும் ஒரு வார்த்தை. கானும் எனது குமாரத்தி யும் அந்த இரணியன் எதிரில் குத்திக்கொண்டு செத்துப்போகிறோம். என் மனைவியும் உறவின ரும் கொலையுண்டபின் எங்களுக்கு இந்த உலகம் கருப்பட்டியா? நீர் ஓர் வீரத்தமிழரானால் எடுங் கள் வசனை ! உங்களுக்கு அனுகூலமாகச் சேனாதி பதியும் இருக்கிறார். ப்ரகலாதன்:-ஆஹா! கான் பின் வாங்கப் போவதில்லை. (வாளை உருவுகிறான்.) மகரிஷி:- [தடுத்து] இனவாசே! பொறுமை கடலினும் பெரிது. பதறாதீர்கள். வினை வலியும், மாற்றான் வலியும், துணை வலியும் சீர்தூக்கி ஒரு காரியத்தைத் தொடங்கவேண்டும். சமீபத்தில் உமக்கு இளவரசுப் பட்டம் கட்டப்போகிறார்கள். அதற்குள் காம்
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/46
Appearance