உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 காட்சி 34] மு. கருணாநிதி 107 (திருசங்கு வீடு ஒரு மூலையிலே உட்கார்ந்து கன்னங்களைக் கண்ணீரால் குளிப்பாட்டிக் கொண் டிருக்கிறாள் முத்தாயி!- அப்போது திருசங்கு நுழைகிறான். அவன் கையிலே சுகதேவ் எழுதிய கடிதம் இருக் கிறது. அதை மறைத்து வைத்துக்கொ காள்கிறான். திருசங்கு: முத்தாயி !... முத்தாயி ! என்னம்மா இப் படி வருத்தமாகவே யிருக்கிறாய்?... முத்தாயி: காரணமா கேட்கிறீர்கள்? திருசங்கு: நீ சந்தோஷமாக யிருக்க வேண்டுமென்று தானே நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன். முத்தாயி: அப்பா! [பேசமுடியாமல் திணறி அழுகிறாள்] திருசங்கு: இப்போது என்னம்மா வந்துவிட்டது! ஆறுதலாக இரு. வேரை அறுத்து முத்தாயி: மல்லிகைக் கொடியின் : விட்டு, அதன் மலருக்கு நீரூற்றி என்னப்பா பயன்? திருசங்கு: வேரை, நான் அறுக்கமாட்டேன் அம்மா ! பயப்படாதே - உன் இஷ்டப்படியே எல்லாம் நடக்கும். முத்தாயி: அப்பா! திருசங்கு: உற்சாகமாயிரு ! உன் கவலை யெல்லாம் நீங் கும். மடத்திலே குருபூஜை வேறு நடக்கப்போகிறது. ஊரெல்லாம் ஒரே நீயும் குதூகலமாயிரம்மா! கொண்டாட்டமாயிருக்கும்.