________________
மு. கருணாநிதி 58 111 சுகதேவன் என்கிற வேடனின் குறிக்கு இலக்காகித் தவிக்கிறது! வெற்றிவேலன் : அப்படியா?- இனிமேல் எனக்கு நம்பிக் கையில்லை. வேதாள நளம்: கேளுங்கள். புயலடித்தாலும்-புறா - அந்தக் கிளையை விட்டுக் கிளம்பாது. அதனால், வேடன் குறி பார்ப்பதற்குள், கிளையை வெட்டி விட்டால் புறாவும் கிளையும் நீங்கள் வைத்த கண்ணியிலே விழுந்துவிடும். பிறகு கிளையை எடுத்து எறிந்து விட்டு, அந்தத் தங்கப் புறாவை தங்கள் புறாவாக்கிக் கொள்ளலாம். வெற்றிவேலன் : புரியும்படி சொல்லும் -- புரியும்படி சொல்லும். எ வேதாளம்: சொல்கிறேன். சுகதேவனுக்கும், முத்தா யிக்கும் ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகையிலே திரு மணம் நடக்கப்போகிறது. நீங்கள், முத்தனிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, அவனைத் தந்திரமாக ஆனந்தபுரம் அனுப்பவேண்டும். அவன் போனால் அவனுடன் முத்தாயி கிளம்பி விடுவாள் !-பிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம். உடனே முத்தனை அனுப் புங்கள்!- வெற்றிவேலன்: சரி ! நீர் சற்று மறைவாக இரும் ! நான் முத்தனை அழைக்கிறேன். ஏ, யாரங்கே ? (வீரன் வந்திட) உடனே முத்தனை இங்கு கொண்டு வா ! (வீரன் போகிறான் ) முத்தன் கட்டப்பட்டிருக்கும் இடம். நில விலங்கிலிருந்து சற்று தண்டனையைத் தளர்த்தி,விலங்குமட்டும் பூட்டப்பட்டு முத்தன்