________________
118 இரத்தக் கண்ணீர் திருசங்கு: எத்தனையோ ஆசைகளை உனக்கு நான் நிறை வேற்றியிருக்கிறேனே நீ தான் எனது முதலும் கடைசியுமான இந்த ஆசையைப் பூர்த்தி செய்யக் கூடாதா? முத்தாயி பல முறை உனக்கு இளநீர் வாங்கியிருக்கி றேன். ஒரு முறை உன் தலையில் விழுகிறேன் என்று தென்னை மரம் சொல்வதற்கும் - நீங்கள் சொல்வதற் கும் என்னப்பா வித்தியாசம்? ருசங்கு: சீ - அதிகப் பிரசங்கி!- அடங்கிக்கிட!- காலையிலே உனக்கும், இளவரசருக்கும் திருமணம். தயாராகிக்கொள் !- திருசங்கு வேகமாகப் போய் விடுகிறான் அதை விட்டு. முத்தாயி அங்கேயே சுருண்டு விழுகிறாள். தெரு பக்கமாகப் போன திருசங்கு அங்கே வேதாளம் வருவதைப் பார்க்கிறான். வேதாளத்தைக் கண்டதும் அவனுக்கோர் புது நம்பிக்கை பிறக்கிறது. அவனது யோசனைப்படி தானே ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகையில் ரகசிய திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட் டது. ஆகவே திருசங்கு ஆவலுடன்- திருசங்கு: வாருங்கள், நல்ல சமயத்தில் வந்தீர்கள். வேதாளம்: என்ன திருசங்கு எல்லாம் நல்லபடி ஏற்பா டாகி விட்டதல்லவா? திருசங்கு: ஏற்பாடுகள் எல்லாம் சரி, ஒரே ஒரு குறை தான். வேதாளம்: என்ன அது? திருசங்கு: சுகதேவை மணந்திட முத்தாயி மறுக்கிறாள்.