________________
140 இரத்தக் கண்ணீர் வேதாளம்: பெருமைமிகு பிரபுவே ! பரிசுக்காகவா நான் பாடுபடப் போகிறேன். பாளையக்காரர் குடும் பத்துக்கு நான் செய்யவேண்டிய கடமையைச் செய்யாவிட்டால் பாபமல்லவா பாம்பாக வந்து கடிக் கும். பலதேவர்: நன்றியுள்ளவனே ! கடவுள் நமக்குத் துணை புரியட்டும். சென்றுவா ! 差 வேதாளம், மாளிகையை விட்டு வெளியேறு கிறான். அவன் இதய அலையின் ஓசையைக் காது கொடுத்து கேளுங்கள். வாழ் "துன்பம் துணையோடு வரும். இன்பம் தனியாக வரும் என்கிறார்களே: அது தவறு. வேதாளத்தின்மீது இன்பம் எறும்பு வரிசை போலல்லவா படையெடுக்கிறது! பலருடைய வேதனையிலேதான் ஒருவன் வளமாக முடிகிறது இந்த உலகத்திலே நானும் உல்லாசமாக வாழவேண்டாமா ஒருவனை அடித்துத்தான் ஒருவன் சாப்பிடுகிறான். ஈ. சிலந்திக்கு ஆகாரம். சிலந்தி, பல் லிக்கு ஆகாரம். பல்லி, பூனைக்கு ஆகாரம். பூனை குறவ ருக்கு ஆகாரம். அதேவழிதான், என் வழியும்! நானும் மனிதன்-எனக்கும் சந்தோஷம் வேண்டும்-சகல சௌபாக் யங்களும் வேண்டும். வேகமாகப் போகும் என்னுடைய வளர்ச்சி. ஒருவேளை என்னை பழுதூரின் பாளையக்கார னாகக்கூட ஆக்கிவிடலாம். போகபூமியிலே உழன்ற புத் தன்--காலக்கோளாறால் போதிமரத்தடிக்குப் போனான். புல்லேந்திக் கிடந்தவன் ஜகம்புரட்டும் சாணக்கியனானான்! வேதாளத்தின் முயற்சிகள் ; பௌர்ணமிகாலத்திலே சந் திரனைத் தொட எழும்பும் சமுத்திரத்தின் அலைகளல்ல! கருமேக த் திலிருந்து பூமியைத் தொட முனையும் நீர்த் துளிகள். ஒரு குளிர்காற்றுதான் தேவை ! கொட்டும், மழை! குவியும் அதிர்ஷ்டம்!” பேசிக்கொண்டே போய்விடுகிறான்.