________________
85 165 மு. கருணாநிதி வெற்றிவேலன் : (கனல் பறக்க) உம்! ஊமையாகி உருத்தெரியாமல் ஆக்கிவிடுவேன். விடு! முத்தாயி அவனிடம் சிக்கிக் கொண்டாள். விடுவித்துக் கொள்ளமுடியாதபடி அகப்பட்டுக் கொண்டாள். அய்யோ அய்யோ என்று அலறு கிறாள். அப்போது முத்தன் கூறையின் வழியாக உள்ளே குதிக்கிறான். தளபதி திடுக்கிடுகிறான். முத்தாயி 'அத்தான்' என ஓடி அவனைக் கட்டிக்கொள்கிறாள். வெற்றிவேலன், முத்தனை வெறிக்கப் பார்க்கிறான். வெற்றிவேலன்: முத்தா! வீணே சாகாதே! நீ யார் என்பதை நிதானித்துக்கொள். முத்தன்: நான் உன் தான்தோன்றித் தனத்தின் தர்பாரிலே,சர்வாதிகார சபாமண்டபத்திலே, சிக்கிச் சீரழிந்த வீரன். ஆனால் இன்று அந்த வீரனாக வர வில்லை. நான் சிந்திய ரத்தத்திற்கு-நான் அனுபவித்த சித்ரவதைகளுக்கு, உனக்குப் பரிசளிக்க வந்திருக் கிறேன். பெண் வேட்டையாடும் பித்தனே ! மதுவும் மங்கையர் சுகமும் - உங்கள் மகுடத்தின் நிழலிலே மறைந்துகிடக்கலாம்! ஆனால் - அந்த மகுடத்தை தூளாக்கிப்போடும் புரட்சி சக்தி பொங்கி எழுந்து விடும் என்பதை உணர முடியாத மதோன்மத்தர்கள் நீங்கள்! 9 வெற்றிவேலன் ஆத்திரங் கொப்பளிக்க-- "என்ன சொன்னாய் " என்று கூறிக்கொண்டே முத்தனின் உடலில் மாறி மாறிக் குத்துகிறான். பலமான அவனது தாக்குதல்களை சமாளிக்க முடி யாமல் முத்தன் திணறுகிறான். வெளியிலிருந்து 11