உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 காட்சி 3] இரத்தக் கண்ணீர் (பழுதூரின் தெரு அரண்மனைக் காவலன் திருசங்கும், இளவர சன் சுகதேவும் போய்க் கொண்டிருக்கிறார்கள். வேதாளம் எதிரே வருகிறான். வேதாளம்: நமஸ்காரம் சுகதேவ்! சுகதேவ்: உம். என்ன வேதாளம் சுகந்தானே !... ஏதா வது ஓலையுண்டா?. வேதாளம்: உங்களுக்கொன்றுமில்லை. உம்- திருசங்கு! உனக்கு ஒரு ஓலையிருக்கிறது : இந்தா பெற்றுக்கொள். நான் வருகிறேன். திருசங்குவிடம் ஓலையைக் கொடுத்துவிட்டு வேதாளம் போய்விடுகிறான். திருசங்கு ஓலையை படித்து முடித்து சொக்காயின் பையில் திணித் துக்கொண்டு சுகதேவுடன் நடக்கிறான். சுகதேவ்: என்ன திருசங்கு! யாரிடமிருந்து ஓலை? திருசங்கு: ஆங்! அவன் ஒரு வேலையற்றவன் பொழுது விடிந்தால் என் உயிரை வாங்குவதே அவனுக்கு வேலை. சுகதேவ்: ஆகா! எவ்வளவு புரியும்படி சொல்லி விட் டாய், புலவர்களைப்போல! திருசங்கு: என்ன தம்பி சொல்வது ! எனக்கு ஒரு மரு மகப் பயல் இருக்கிறான். அவனுக்கு பெண் வேண்டு மாம். சகதேவ்: ஏன், பிறப்பதெல்லாம் ஆணாகப் பிறக்கிறதோ மருமகன் என்றால் உமது மகளின் கணவன் தானே ! திருசங்கு: இல்லை தம்பி இல்லை ! கல்யாணத்துக்குப் பெண் வேண்டுமாம்.