உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 இரத்தக் கண்ணீர் முடியுமா, ஒரு குடும்பத்தை ? நீயும் மனிதனாயிற்றே -கல்யாணம் பண்ணிக்கொண்டு, மாமனார் வீட்டை எதிர்பார்த்துக் கிடக்க உனக்கு மானமில்லாமலா போய்விட்டது. முத்தாயி சின்னப் பெண். உலகம் தெரியாதவள் - காதல் பேசுகிறாள். இப்போது! கல்யாணமான பிறகு, காதல் கீதல் எல்லாம் கடையைக் கட்டிவிடும். காதுக்கு வைரத் தோடு, கழுத்துக்கு முத்துமாலை- இப்படி மாறிவிடும் பெண் களுடைய புத்தி! முடியுமா உன்னால் அவைகளை வாங்கித் தர என் பெண்ணுக்கு! குடும்பம் இருக் கட்டும், திருமணத்திற்கு நிச்சயம் செய்ய பொன் நாணயம் வைத்து புரோகிதருக்கு தக்ஷணை கொடுக்க வழியிருக்கிறதா உன்னிடம். ஒரு என்று முத்தா! ஆத்திரமாகப் பேசுகிறேன் நினைக்காதே! இன்னொன்றையும் சொல்லிவி கிறேன். அரண்மனையிலே வேலை பார்த்தாய்-அது வும் போய்விட்டது! அஞ்சல் மனைக்கு, கு ரை தேய்த்துக் கொடுத்து அதற்குக் கூலியாக இந்த உள்ளங்கை போன்ற அறையிலே வசிக்கிறாய்- அந்த வேலையும் நீ பார்க்க முடியாது: இனிமேல் ! அரண் மனை உத்திரவு தடுக்கிறது ! இனி-வீட்டு நிழல்கள் மரத்தின் நிழல்கள் - இவைதான் உனக்கு வாசஸ் தலம்/ உன் வறுமையைப் பரிகசிக்கின்றேன் என்று கவலைப்படாதே! கவலையோடு கவலையாக இன்னும் ஒன்றை சொல்லிவிடுகிறேன். நீ உணர்ந்து பார்ப் பதற்காக. உனக்கு வயதாகியிருந்து உலகத்தோடு ஓட்டி ஒழுகும் பழக்கமிருந்து- 1-உனக்கு ஒரு மகளும் இருப்பதாக வைத்துக்கொள். அந்த மகளைத் தகப்பன் பெயர் தெரியாத ஒரு மணமக கனுக்குத் திருமணம் செய்துகொடுப்பாயா?