________________
மு. கருணாநிதி 65 காட்சி 18] [முத்தனின் அறை வேதாளம்: ஆமாம் முத்தா! இப்படி எத்தனை நாளைக்குத் தான் பட்டினி கிடப்பாய்? முத்தன் : உணவு கிடைக்கும் வரையிலும். டாதென்று வேதாளம்: நான் சொல்வதைக் கேள். பாளையக்காரர் உனக்கு எங்கேயும் வேலை தரக் கூடா உத்திரவு போட்டுவிட்டார். நீயோ ஆள் வாட்ட சாட்டமாய் இருக்கிறாய். தேகத்திலே நல்ல வலிமை இருக்கிறது..... முத்தன் : பாளையக்காரரை அடித்து நொறுக் விடலாம், இல்லையா? வேதாளம்: பைத்யக்காரா! நான் சொல்வதைக் கேட் டால் உனக்கு ஒரு கவலையும் இருக்காது. முத்தன் : செத்துவிடலாம் என்கிறீரா? வேதாளம்: இல்லையப்பா இல்லை. முத்தன் : சாவு ஒன்றுதானய்யா: உலகத்தில் ஏழைகள் அழைத்ததும் ஓடிவரக்கூடியது. வேதாளம்: முத்தா! பொருளுக்குப் பொருள். பதவிக் குப் பதவி, பார்க்கிறவன் பயப்படுவான். படையிலே சேர்ந்துவிடு. முத்தன்: படையில்!?? வேதாளம்: பயப்படாதே நான் சேர்த்துவிடுகிறேன். சிற்றரசு விஷயத்தில் தலையிட பாளையக்காரருக்கு