உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 பழுதூர் வேங்கை நகரத்தான் காலில் சிக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே பழுதூர் மீண்டும் படைதிரட்டி தலையெடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்குமில்லை - அந்த ஊரின் மக்களுக்குமில்லை. காரணம்; பாளையக்காரன் ஆட்சியில் வாழ்வதும் - வேங்கை நகரத்தான் ஆட்சியில் வாழ்வதும்- இரண்டும் ஒன்றுதான் அந்த மக்களுக்கு. ஆனாலும் - அதோ பாளையக்காரர் பலதேவர் தலைகுனிந்தபடி வாட்டமுடன் நிற்கிறாரே: ஏன்? அவரது குடும்பத்திலே ஏற்பட்ட அவமான கரமான ஒரு நிகழ்ச்சி அவரை அப்படிக் கலக்கி விட்டது. அத்தகைய நிகழ்ச்சிதான் என்ன? என்னோடு பழுதூருக்கு வாருங்கள் : முழுக் கதையும் சொல்லுகிறேன்.