________________
மு. கருணாநிதி 77 வெற்றிவேலன்: சேருவதற்கு கட்டாயமில்லை! ஆனால் சேர்ந்து விலகுவதற்கு உன் இஷ்டமில்லை. முத்தன்: அதற்குத்தான் நூறு பொன் தண்டம் செலுத்திவிட வேண்டும் என்று நிபந்தனை யிருக்கிறதே. வெற்றிவேலன்: இவன் மிகவும் திமிர்பிடித்தவன் - உன் வாலை ஒட்ட நறுக்கவேண்டும். இந்தத் தேகத்தை வளர்த்து என்ன செய்யப்போகிறாய்... தேசத்திற் காகத்தான் பலி கொடேன். முத்தன்: பலி கொடுக்கலாம்- எமக்கென்று ஒரு தேசம் மீட்க இருந்தால்! பழுதூர் அடிமை பூமி. இதை ஒரு படை திரளட்டும். அதிலே சேராதவர் அனை வரும் செத்தவராகவே கருதப்படுவர். வெற்றிவேலன்: என்ன சொன்னாய், ராஜத்துரோகி ! முத்தன்: அப்படியெல்லாம் குற்றம் சாட்டிவிடாதீர் கள். என்னை வீரனில்லை யென் றீர்களே : அதற்கு விளக்கம் தந்தேன் அவ்வளவுதான். வெற்றிவேலன்: என்னை எதிர்த்துப் பேசிய முதல் ஆள் இவன்தான்! இவனுக்கு ஒரு முடிவு தேடாமல் விட மாட்டேன். வேதாளம்: கொஞ்சம் வாருங்களேன். வெற்றிவேலனை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கே, வேதாளம்: பயலை விடாதீர்கள் / விட்டால் தண்டப் பொருளைக் கட்டி மீண்டுவிடுவான். தாயியைப் பிடிக்க முடியாது. பிறகு, முத்