________________
காட்சி 1] இரத்தக் கண்ணீர் [நாடகம்] [பழுதூர் ஊரைச்சுற்றி யோடிடும் ஆறு. அதன் கரை களைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை. ஆற்றின் ஓரங்களிலே கவனிப்பாரற்றுக் கிடக்கும் கனிகுலுங்கும் சோலைகள். அவைகளை வீட்டு ஊருக்குள் நுழைந்தால் அழகிழந்து போன அகலமான வீ திகள். வீ திகளின் பள்ளங் களிலே தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீர். அதிலே புரளும் பன்றிக்குட்டிகள். அவைகளுடன் கல் லெறிந்து விளையாடும் சிறுவர்கள். பெரும் பெரும் வீடுகள். உயர்ந்த கோபுரத்தையுடைய ஓர் ஆலயம். ஆலயத்திற்கு அருகாமையிலே பெரியதோர் மடாலயம். ஊருக்கு நடுவே உப் பரிகைகள் கொண்ட பலமான அரண்மனை. அரண்மனையை அடுத்து சிறிதும் பெரிதுமான சோபையிழந்த தெருக்கள். தெருக்களிலே குதிரை பூட்டிய பல்லக்கு வடிவமான வண்டிகள் போவதும் வருவதுமா யிருக்கின்றன. காய்கறிக் கூவியவண்ணம் கூடைகளை தலையில் சுமந்து வியாபாரம் செய்திடும் வயதான ஆடவர்-பெண் டிர். கோயிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்திலே நீந்தி விளையாடும் வாலிபர்கள்; தாமரையெனும் முகமுடைய மங்கையர்கள். குளத்தின் எதிர்க்கரையிலே பழமை படிந்து போன ஒரு வீடு. அந்த வீட்டின் முகப்பிலே