________________
90 காட்சி 27] இரத்தக் கண்ணீர் (பழுதூர் வீதி பாளையக்காரரின் அரண்மனைப் பக்கமாக வெற்றிவேலனின் படை, நடை போடுகிறது. திரளான மக்கள் வேடிக்கை பார்த்தவாறு பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றி வேலனும், வேதாளமும் வண்டியிலிருந்தபடி ஏதோ. பேசிக் கொண்டிருக்கிறார்கள். தளபதி யின் வண்டியில் தான் ஏறி வருகிறோமே என்ற பெருமையும், கர்வமும் வேதாளத்தை ஆட் கொள்ளுகின்றன. நிமிர்ந்த பார்வையுடன் அவன் மக்களைப் பார்த்துக் கொண்டு - விகார மான அந்தமுகத்திலே விசித்திரமான புன்னகை தவழ வீற்றிருக்கிறான். படை வீரர்கள் இரு மருங்கிலும் குதிரைகளிலமர்ந்து பல்லக்குவண்டி களைப் பாதுகாத்துச் செல்கின்றனர். வீரர் அணி வகுப்புக்களின் போது இசைத்திட வேண் டிய போர்வாத்தியங்கள் ஆடம்பரமாக முழங்கு கின்றன. அத்தகைய அலங்காரம் நிறைந்த பவனியிலே அவன்மட்டும் அவமானத்தை சுமக்க முடியாமல் தலையைக் கவிழ்ந்தவண்ணம் செல்லு கிறான். அரண்மனையின் உச்சியிலிருந்து ஒரு உருவம் அந்த ஊர்வலத்தைக் காணுகிறது. அது யாருமில்லை ; பூங்காவனம் தான்! பூங்காவனத் தின் கண்கள், விலங்கணிந்து வீதியிலே செல் லும் முத்தனின் மீது பாய்கின்றன. அந்தக் காட்சியை அவளால் காண முடியவில்லை. மாக முகத்தில் அறைந்து கொள்கிறாள். கள் நீரைப் பொழிகின்றன - ஓடிப்போய் படுக் கையில் விழுகிறாள்- அழுகிறாள். பல கண் இப்படி எத்தனையோ முறை அவள் அழு திருக்கிறாள். அப்போதெல்லாம் - அவளை அசை