உளத்தும் நினைமின்கள்; வாயாற் புகழை உரைத்திடுமின் :
திளைக்கும் இரத்தின நற்கிரி வேலன் திருவடியில்
இளைப்புற வீழ்ந்து பணிமின்கள்; எந்த இனலும்அறும்:
(15)
காமர்கள் ஆயிரம் பேர்எனி னும்கவின் காலில்உள
தாம் அந்தத் தூசினுக் கொவ்வா ரெனின்எழில் சாற்றுமதோ ?
வாம மருங்கில் உமைமகிழ்ந் தேபால் வழங்கஇன்பம்
(16)
சேய், குகன், கார்த்திகை மாதர் தருபால் தெவிட்டியதால்
ஆய்தரு பாலைக் குடித்தான்; இரத்ன அரும்கிரியில்
வேய்தரு தோள்வள்ளி நாதன், குமரன், விளங்குகிறான்;
(17)
பணி அணி ஈசன் பிரணவத் தின்பொருள் பண்புடனே
அணிபெற ஓதுகென் றேசொல அங்ஙன் அருளியவன்,
திணிபெறு தோளன், இரத்தின நற்கிரி சேர்முருகன்
(18)
இன்றுநாம் போகுவம், நாளைக்குப் போகுவம் என்றெண்ணியே
நன்றுறும் வாணாளை வீணாக்கித் தாமதம் நண்ணல் இலா
தொன்றிய அன்புடன் இன்னே இரத்தின ஓங்கலினில்
(19)
வீழ்ந்த அரசர்கள் எத்துணை பேர் ? அவர் வேந்தர்என
வாழ்ந்தவர் என்றந்தக் காலன் விடுவனோ ? மானிடர்காள்,
சூழ்ந்து பணிமின்கள்; ரத்ன கிரிப்பால சூரியனும்
(20)
உறும்தார கன்துணை ஆகிஅத் தேவர்க் குலைவுசெய்த
வெறும்கிர வுஞ்ச கிரியினைச் செஞ்சுடர் வேல்எடுத்தே
அறும்படி செய்தவன், ரத்தின நற்கிரி ஆண்டிருப்பான்,
(21)
நாடும் விழைவெல்லாம் நீயிர் பெறல்ஆம், அயிலவன் நற்பதத்தைக்
கூடின் : இதுதிண்ணம் ; ஐயம் இலை ; நீர் குறிக்கொண்டவன்
பாடும் புகழ்பெறும் பாதத்தை ஏத்திப் பணிகுமினோ ;
(22)
10