உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேயநல் வீரம் உறுவாகு வைத்தூது விட்டவுணன்
சேய திருத்தாள் பணிய அமரர் சிறைவிடுத்தாய் ;
போய பிழைகள் பொறுத்திடு வான்எனப் போந்துசொல

ஆயவன் சற்றும் தணிகிலன் தன் இகல் ; ஆர்விதியே.

(23)



விதியையும் வெல்லலாம் அன்னவன் தாள் இணை வீழ்ந்திறைஞ்சின் ;
சதிசெயும் என்றன் தலை எழுத் தெல்லாம் தவிர்ந்ததென்று
மதிகொள் அருண கிரிநாதன் சொன்ன வகை எண்ணுமின் !
அதிசயம் அன்றிது ; நம்தலை மேல் எழுத் தற்றிடுமே. (24)

அற்றவர்க் கீமின் ; அவர்க்கருள் செய்மின் ; அடல்மிகுந்த
கொற்றவன், ரத்ன கிரிஉறை பாலன் குரைகழலை
உற்றன்பி னோடு தொழுதிடின் எல்லாம் உமக்குவரும் :
பற்றறும் ; லாம் ; இதுபலர் பார்த்ததன்றே. (25)

பார்த்துப் பணிமின் ; அடியிணை வீழ்ந்து பரவுமின்கள் ;
வேர்த்து விறுவிறுத் தன்புக்கண் ணீர்வர, விழைவுடனே
ஆர்த்துப் புகழ்மின் ; அவன் அருள் பெற்றால் ; அதன்பிறகிங்
கீர்க்கின்ற பாசம் தனை அண்ட ஒட்டா திதுதொண்டதே. (26)

தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் கும்சுத்த ஞானம் எனும்
தண்டை அம் புண்டரி கம்தரு வாய் ; ரத்னத் தாழ்கிரியை
அண்டிய பால முருகனே, நின்னை அனுதினமும்
வண்டலர் பூங்குழ லாள்வள்ளி யோடு வணங்குவனே. (27)

வணங்கித் துதிக்க அறியா மனித ருடன் இணங்கிக்
குணம்கெட்ட துட்டனை ஈடேற்று வாய் ; ரத்னக் குன்றினிலே
மணம்கமழ் சோலைகள் சூழ விளங்கிய மாமயிலோய்,
நிணம்கக்கும் தேகம் நிலைஇல தென்று ரினைகுவனே. (28)

நினைந்தும், புகழ்ந்தும், நடந்தும், கிடந்தும், நினைஅன்றியே
கனைந்து நினைப்பதற் கொன்றில்லை காண் ; ரத்னக் கார்மலையில்
முனைந்தவை வேலொடு நிற்கின்ற பால முருக, நினை
இனைந்திடும் போது நினைந்திடு வேன் ; அருள் ஈகுவையே. (29

11