பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வண்மை மிகுந்த உடலுடை யோரும் மயானத்திலே கண்பெற ஒர்பிடி சாம்பராய் ஆவது கண்டபின்பும் நண்புள்ள தென்றிந்தத் தேகத்தை நம்பியே நாளும்உழைத் துண்பதை அன்றி.நீ பால முருகனை ஒர்திநெஞ்சே, (38)

ஒரோர்கால் வாய்விட்டு நம்பெரு மான்என்றே ஒலம் இடும் , சீர்ஒர்கால் ஒவாமல் நெஞ்சில் நினைப்பாள் ; சிவன்தருசேய் ஈர முடன்அருள் செய்குவன் கொல்லோ ? எனஅழுவாள் ; பேருடைப் பால முருக, இப் பேதையைப் பேணுவையே. (39)

பேணும் உடம்பினைப் பெற்றத ற்ைபயன் பீடுறவே ஏண்ஒன் றிலாத வேலவ னைப்பணிந் தின்புறுதல் ; காணும் இவ் வுண்மை அறிந்தேன் ; இரத்னக் கவின்கிரியில் மானுடைப் பால முருகனைப் போற்றி வணங்கினனே. (40)

வணங்கிய வில்லுடை வீரர்கள் ஆயினும், மாற்றலரைப் பிணங்கிய போரினில் வெற்றிகொண் டாலும் பெறும் பயன்என்? கணம்கொடும் காலன் வரின்அவர் வீரந்தான் காப்பதுவோ? மணம்கொள் கடம்ப மலர்மாலைப் பால, வடிவேலனே. (41)

வடிவுடை மாதர் மயக்கினில் வீழ்ந்து மதிதவறிக் கொடிய பிணியால் வருந்தும் நிலைபெறும் கோலம்உளார், நெடியவை வேலுடைப் பால முருகநின் நிலவடியிற் படிய வணங்கிடின் நற்பயன் யாவும் படைப்பவரே. (42)

படைப்பவன் ஆணவம் மிக்குநின் னைக்கண்டும் பண்பிலளுய் மிடுக்கொ டிருப்பதைப் பார்த்தவன் தன்னை வெடுக்கெனவே அடுக்கிய குட்டுகள் அன்னேன் தலையில் அளித்தவவனே, இடுக்கண் இலாத இரத்ன கிரியில் இருப்பவனே ! (43)

பவம்அறும் என்றுனைப் பல்லோர் நயந்து பணிந்தனரால் : அவமுறும் வாழ்க்கையில் வீணளைப் போக்கும்.அவலமுளேன், சிவம்.உறும் நின்அடி சேவிக்க வைத்துத் திருவருள்செய் ; தவர்புகழ் ரத்ன கிரிஅமர் பால, தயாபரனே. (44)

தயையிற் சிறந்தவள் தாய்என்பர் ; அத்தகு தாயைவிட இயைபுற்ற நற்றயை நீஉடை யாய் அவன் ஈறுபெறின் நயம்.உற்ற தாய்பிறர் ஆர்உளர் ? நீயோ நலமுடனே பயம்.உற்றெந் நாளும் புரப்பவன் என்று பணிகுமினே. (45)

13