உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல்உண்டு; துன்பில்லை ; மஞ்ஞைஉண் டின்னல் விளைவதிலை;
தாலுண்ட சீர்உண்டு ; நாள்தொறும் ஏத்தியே தாழ்ந்திடலாம் ;
கோலுண்ட மான்போல் துயர்கொண்டு நெஞ்சே, குலையுறல் நீ;
சேலுண்ட கண்வள்ளி நாதன் உளன், ரத்னச் செங்குன்றிலே. (54)

குன்றம் எலாம்திருக் கோயில்கொள் வேலன் ; குழாம்துதிக்க
நன்றுயர்ந் தேரத்ன நற்கிரிப் பால நலவடிவில்
ஒன்றினன் ; பால முருகன் அடிமைக் குயர்வளித்தான் ;
கன்றென நின்றவன் தாள்பணிந் தேத்திற் கதிதருமே. (55)

கதி அறி யாத குருடனைப் போலவே, கண்பெறினும்
துதி அறி யாமல் இரத்ன கிரிக்குகன் சோதி உரு
வதைவணங் காமல் இருந்திடின் வாழ்க்கை அடைந்தபயன்
எதுவும் இலதாகி வீணாய் விடும் என்ப தெண்ணுநெஞ்சே. (56)

சேயாம் முருகன் நமைக்காக்க என்று தன் சிந்தைகொண்டு
தேயாப் புகழுடன் ரத்ன கிரியில் திகழுகின்றான் ;
நீயோ எவர்எவ ரோதுணை என்று நினைவுறுவாய் ;
ஆயாத நெஞ்சமே, நில்லாத திவ்வுட லாம் என்பதே. (57)

பத்துத் தலையைப் படைத்த இராவணன், பாற்கடலில்
நத்தித் துயின்றவன் அம்பால் இறந்தனன் ; நானிலத்தில்
அத்தகை வல்லவன் பொன்றிய தை அறிந் தாலும் இன்னும்
புத்திவந் தோத்ன வெற்போற் றொழாவிடின் பொற்பெதுவே ? (58)

எதுநிலை ? ஏது நிலையாதனவென்றறி வெய்திநின்றால்
கதுமென ரத்ன கிரியினிற் பாலனைக் கண்டுதொழு
திதுகடடன் எனநிற்றல் நற்பயன் ; காணுக, என்றன்நெஞ்சே,
எதுவரி னும் வாட்டம் இல்லா திருக்க இயலும் அன்றே. (59)

அன்றே உனக்கியான் ஆளாகி விட்டேன் ; அரியகுணக்
குன்றே, இரத்தின மாமலை நின்ற குமர, குகா,
இன்றெனக் கேதும் பயம் இலை காண் ; காலன் எய்துகினும்
உன்றனைப் போற்றியே ஒடவைப் பேன் ; அஃதுனதருளே (60)

அருளைப் பெறுவ தரிதரி தென்பர் அவர்பலரே ;
தெருள்உடை யோரோ மிகஎளி தென்பர் ; திறம் அறியேன் ;
மருள்உடை யேன் ; ரத்ன வெற்பினில் வாழும் மயிலவனே,
குருளைபோல் என்னைநீ ஆண்டுகொண் டால் என்ன
குற்றம் உண்டே? (61)

15