உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத்தைச் சொன்னல் உடம்பெரிச் சல்வரும் உற்றநல்லோர் மெள்ளத்தம் நற்றயை யாலே அறிவு விளம்பினரேல்

கொள்ளத் திறம்இன்றிக் காதிலான் போலக் குமைந்திருப்பேன் ; எள்ளத் தனநின் அருள்தா இரத்ன எழில்வெற்பனே. (70)

வெற்பெலாம் நின்றருள் செய்குவை ; வெற்பினர் வேலனைக்கொண் டற்புட னேவெறி ஆடஅங் கேவந் தருள்புரிவாய் ; சிற்பர ணே, ரத்ன வெற்புடைப் பால, திகைக்கும்என்றன் அற்ப மதியினைப் போக்கிநல் ஞானம் அருளுதியே. (71)

அருள்என்ப தன்பீன் குழவிஎன் றேஉரைத் தார்பெரியார் திருவள் ளுவர் ; எனக் கன்பும் இலை அருள் சேருமதோ ? கருவுள் ளளவும் சுகம திலாத கதிபோக்குவாய் : குருவென் புகழ்கொள் இரத்ன கிரிஉறை கோழியனே. (72)

கோழிக் கொடியன் அடிபணி யாமற் குவலயத்தே வாழக் கருதும் மதியிலி நான் ; இந்த மாசகற்றி ஆழநின் தாளைத் தியானிக்க நல்ல அருள்புரிவாய் ; சூழும் புகழ்ரத்ன மாமலை மேவிய தூயவனே, (73)

தூயவர் நேயம் இருந்தால் மெலமெலத் தூய்மைவரும் , ஏயபல் தீங்கெல்லாம் நீங்கும் எனவே இயம்புவரால் , ஆயஅத் தூயவ ரோடே இணங்க அருள்தருவாய் , மாயன் மருகா, இரத்தின நற்கிரி வாழ்பவனே. (74)

கிரிஎன ஓங்கித் துளக்கம்இல் லாது கிளர்பவர்கள் நரிஎன ஒல்கி நடுங்குதல் இந்தமா ஞாலஇயல் , உரியநின் றன்னே வணங்கின் அமைதி உளத்தமையும் , அரிய இப் பேற்றை அருள்வாய் இரத்ன அடல்வெற்பனே. (7.5)

பன்னும் பனுவல் எனநெஞ்சு பாய்ந்து படர்தரும் இஃ துன்னும் பொருள்ஒன் றல; பல கோடி உறும் ; இதனை நின்நல் அடியிணை சிந்திக்க நல்லருள் நீபுரிவாய் , மின்னும் சுடர்வேல் இரத்ன கிரிஉரை மேலவனே. (76)

மேலவன், கீழவன், நாப்பண்உள் ளான், எங்கும் மேயபிரான் ; காலனைக் காலால் உதைத்தவன் சேய் , எனக் காத்திடுவான் : சீலம்ஆர்ந் தோர்போற்றும் ரத்ன கிரியில் திகழுகின்றன், பால முருகன் எனும்பெயர் சொல்லிப் பரவிடவே. (77)

17